தற்போது நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலையைத் தொடர்ந்து, கட்டுநாயக்க மற்று தெற்கு அதிவேக நெடுஞ்சாலைகள் ஊடாகப் பயணிக்கும் வாகனச் சாரதிகள் வேகத்தை 60 கிலோ மீற்றர் வரை கட்டுப்படுத்திப் பயணிக்குமாறு, சாரதிகளுக்கு வீதி அதிகார சபை இன்று (24) அறிவுறுத்தியுள்ளது.
அத்தோடு, அதிவேக நெடுஞ்சாலைகள் ஊடாகப் பயணிக்கும் வாகனங்கள் மின் குமிழ்களை ஒளிரவிட்டுப் பயணிக்குமாறும் சாரதிகளுக்கு வீதி அபிவிருத்தி அதிகார சபை அறிவுறுத்தியுள்ளது.
மேலும், தற்போதைய சீரற்ற காலநிலை காரணமாக, வாகனச் சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் வாகனங்களைச் செலுத்த வேண்டும் என்றும் கேட்டுள்ளது.
விபத்துகளைத் தவிர்க்கும் வகையில், குறித்த அறிவுறுத்தல்கள் வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.