சாய்ந்தமருது தனது உட்கட்டமைப்பு அபிவிருத்தியில் கவனம் செலுத்த வேண்டும்.- உயரபீட உறுப்பினர் யஹ்யாகான்

னைய பிரதேசங்களில் இடம்பெற்று வரும் அபிவிருத்திகளுடன் சாய்ந்தமருதை ஒப்பிடும்போது வருந்தும் அளவுக்கு அபிவிருத்தியில் பின்னிலையில் இருப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும் சமூக சிந்தனையாளருமான அல் ஹஜ் ஏ.சி. யஹ்யாகான் தெரிவித்தார்.
தேவையுடைய சிலருக்கு விட்டைத் திருத்துவதற்காகவும் மின் இணைப்பைப் பெறுவதற்காகவும் குடிநீர் இணைப்பைப் பெறுவதற்காகவும் உதவிகள் வழங்கும் நிகழ்வு 2019.09.23 ஆம் திகதி சாய்ந்தமருதில் உள்ள யஹ்யாகான் அவர்களது அலுவலகத்தில் இடம்பெற்றது. இங்கு கருத்துத் தெரிவித்தபோதே மேற்படி தனது கவலையை வெளியிட்டார்.
சரியான அபிவிருத்தியின்றி பல வீதிகள் பாடசாலைகள் என பல்வேறு இடங்கள் ஏங்கிக் கொண்டிருப்பதாகவும் தோணா சுகாதாரத்துக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் இருக்க பொருத்தமான வீடின்றி பலர் கஷ்ட்டப்படுவதாகவும் எதிர்காலத்தில் இவைகள் பல சமூகப்பிரச்சனைகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார்.
நாட்டின் நாலாபுறத்திலும் பல்வேறு வீட்டுத்திட்டங்கள் ஏற்படுத்தப்பட்டு வரும் இன்றைய நிலையில் சாய்ந்தமருதில் ஒரு வீட்டுத்திட்டத்தையாவது நிர்மாணிக்க இங்குள்ள அரசியல்வாதிகள் முன்வரவில்லை என்றும் தெரிவித்தார்.
சாய்ந்தமருது மக்களின் நீண்ட நாள் அபிலாஷை வெகுவிரைவில் நிறைவேறும் என்று தெரிவித்த ஏ.சி. யஹ்யாகான், அதற்காக தன்னால் முடிந்த அனைத்து அழுத்தங்களையும் பிரயோகித்து வருவதாகவும் தெரிவித்தார்.
மிக மீண்ட காலமாக பிரதேசத்தில் தேவையுடைய தனிப்பட்டவர்களுக்கும் நிறுவனங்களுக்கும் கல்வி, விளையாட்டு, உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக நிதியுதவிகளையும் ஏனைய உதவிகளையும் செய்துவரும் யஹ்யாகான் அவர்கள் தனது தனிப்பட்ட நிதியில் உதவிகளை செய்து வருவது குறிப்பிடத்தக்கது. 






எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -