ஆசிரியர் தொழிற்சங்கங்கள் இன்று சுகயீன விடுமுறை போராட்டத்தில்


று கோரிக்கைகளை முன்வைத்து ஆசிரியர் தொழிற்சங்கங்கள் இன்று சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுப்பட்டன.

இன்று காலை 10 மணிக்கு கோட்டை ரயில் நிலையத்தின் முன்னால் சகல ஆசிரியர் தொழிற் சங்கங்களும் இணைந்து பெரும் ஆர்பாட்டமொன்றை நடத்தின.

சுகயீன விடுமுறை போராட்டம் நாளையும் இடம்பெறும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொது செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.

சம்பளம் முரண்பாடு , சம்பள உயர்வு உட்பட ஆறு கோரிக்கைகளை முன்வைத்து ஆசிரியர்களும் அதிபர்களும் சுகவீன விடுமுறை போராட்டத்தில் ஈடுப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

இவ் சுகவீன விடுமுறை போராட்டம் தொடர்பாக ஜோசப் ஸ்டாலின் மேலும் கூறுகையில்,

அதிபர்களிதும் ஆசிரியர்களினதும் சம்பள முரண்பாடுகளை நீக்குவதாக கல்வி அமைச்சு பலமுறை எமக்கு உறுதி மொழி வழங்கிய போதிலும் அது நிறைவேற்றப்பட வில்லை. இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியும் பலன் இல்லை எனத் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -