நானுஓயாவில் மண்சரிவில் சிக்குண்டு ஒருவர் பலி



க.கிஷாந்தன்-

நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நானுஓயா நகரத்திற்கு அண்மித்த பகுதியில் வீட்டிற்கு முன்பாக ஏற்பட்ட மண்சரிவில் சிக்குண்டு ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் 14.08.2019 அன்று காலை இடம்பெற்றுள்ளதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த மண்சரிவு ஏற்பட்ட பகுதியில் மேற்படி நபர் வேலை செய்து கொண்டிருந்த வேளையில் மண்சரிவுடன் கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் நானுஓயா பகுதியை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 33 வயதுடைய மூர்த்தி இராஜேந்திரன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மரண விசாரணைகளின் பின் சடலம் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -