கொழும்பில் உள்ள பாக்கிஸ்தான் உயா் ஸ்தாணிகா் அலுவலகத்தில் பாக்கிஸ்தானின் 73வது சுதந்திர தினம் உயா் ஸ்தாணிகா் மேஜா் ஜெனரல் காலாநிதி சகீட் அகமட் கஸ்மட் தலைமையில் நடைபெற்றது. உயா் ஸ்தாணிகா் தேசியக் கொடியை ஏற்றிவைத்து கேக் வெட்டி கொண்டாடினாா் . இந் நிகழ்வில் இலங்கையின் இரனுவ கொமாண்டா் மேஜா் ஜெனரல் சிறிலால் வீரசுரியவும் கலந்து சிறப்பித்தாா்.
அத்துடன் உயா் ஸ்தாணிகா் ஜம்மு காஸ்மீா் மனிதபிமான முறையில் ஒரு சமாதான தீர்வை எதிா்பாா்த்து நிற்கிறது அத்துடன் அந்த பிராந்தியத்தில் கட்டவிழ்த்துவிடப்பட்ட அநியாங்களையும் இரானுவ துஸ்பிரயோகங்களையும் ஜக்கிய நாடு சபை முன்வந்து அங்குள்ள மக்களுக்கு சமாதானதும் சுதந்திரமான பிராந்தியமாக அமுல்படுத்துமாறும் உயா் ஸ்தாணிகா் தெரிவித்தா்ா. அத்துடன் இலங்கையுடன் வா்தத்க மற்றும் சகல துறைகளிலும் நீண்டகாலமாக நட்புரவுடன் இலங்கை விடயத்தில் பாக்கிஸ்தான் என்றும் கைகொடுத்து வந்துள்ளதாகவும் பாக்கிஸ்தான் உயா் ஸ்தாணிகா் அங்கு உரையாற்றினாா் .



