சுய தணிக்கையின் அரசியல் ஆய்வு நூல் வெளியீட்டு விழா இன்று (03) திருகோணமலையில் மாவட்ட ஊடகவியலாளர் சங்கத்தின் தலைவர் அ. அச்சுதன் தலைமையில் நடைபெற்றது.
அரசியல் ஆய்வாளர் யதீந்திராவின் " சுயதணிக்கையின் அரசியல் " ஆய்வு நூல் வெளியீட்டு விழா நிகழ்வின் பிரதம விருந்தினராக தனியார் தொலைக்காட்சி குழுமத்தின் தலைவர் எஸ். எஸ். குகநாதன் கலந்து சிறப்பித்தார்.
நூல் வெளியீட்டின் ஆரம்ப நிகழ்வாக வரவேற்புரையை திருகோணமலை நகரசபை உறுப்பினர் க . ஜெயபிரகாஷ் வழங்க, நூல் அறிமுகத்தினை கவிஞர் தி. பவித்திரன் வழங்கினார்.
நூல் பற்றிய கருத்துரையினை நீங்களும் எமுதலாம் ஆசிரியர் எஸ். ஆர். தனபாலசிங்கம் வழங்கியதுடன் சமகால நிலைமைகள் தொடர்பில் கூர்மை செய்தித்தளத்தின் பிரதம ஆசிரியர் அ . நிக்ஸன் உரையாற்றினார்.
இவ் விழாவில் எமுத்தாளர்கள், கவிஞர்கள், ஆசிரியர்கள், ஊடகவியலாளர்கள் உட்பட பலர் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
