டொக்டர் ஷாபிக்கு எதிராக முறைப்பாடளித்த பெண்கள் இருவர் கர்ப்பம் தரித்துள்ளனர்..!

எம்.எப்.எம்.பஸீர்-

ட்ட விரோதமாக கருத்தடை செய்ததாக குருணாகல் போதனா வைத்தியசாலையின் சிரேஷ்ட பிரசவ மற்றும் பெண்ணியல் விவகார வைத்தியர் மொஹம்மட் ஷாபிக்கு எதிராக முறைப்பாடளித்த இரு பெண்கள் தற்போது கர்ப்பம் தரித்துள்ளனர்.

தாம் வைத்தியர் ஷாபி ஊடாக சிசேரியன் சத்திர சிகிச்சைகளுக்கு உட்படுத்தப்பட்டதாகவும், அவ்வாறு சிசேரியல் செய்யப்பட்டு அடுத்த குழந்தையைப் பெற கடந்த இரு வருடங்களாகியும் குழந்தை கிடைக்கவில்லை எனவும் அதனால் தாம் வைத்தியரால் கருத்தடை செய்யப்ப்ட்டுள்ளோமா என சந்தேகம் எழுவதாகவும் அந்த இரு தாய்மாரும் முறைப்பாடளித்துள்ளனர்.

அவர்களது முறைப்பாட்டை பதிவு செய்த சி.ஐ.டி., பின்னர் அவர்களை வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்துவது குறித்து அறிவிக்க தொலைபேசியில் அழைத்துள்ளனர். அப்போது அவ்விரு தாய்மாரும், ' சேர்.... எமக்கு அந்த சோதனைகளை அவசியமில்லை...நாம் கர்ப்பம் தரித்துவிட்டோம்.' என பதிலளித்ததாக சி.ஐ.டி. அதிகாரிகள் கூறினர்.

எது எவ்வாறிருப்பினும் இரு பெண்கள் கர்ப்பம் தரித்துள்ளதாக குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு தவல்கள் கிடைத்துள்ள நிலையில் அது தொடர்பில் விசாரணைகளை குற்றப்புலனாய்வுப் பிரிவினர் ஆரம்பித்துள்ளனர்.

அத்துடன் ஷாபிக்கு எதிராக முறைப்பாடளித்த பெண்கள் அனைவரிடமும் மீள வாக்கு மூலம் பெறுவதற்கான நடவடிக்கையையும் ஆரம்பித்துள்ளனர்.வீகே
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -