நீரோடையிலிருந்து உயிரிழந்த நிலையில் ஆண் ஒருவரது சடலம் மீட்பு..


க.கிஷாந்தன்-

ட்டன் மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாமிமலை சின்ன சோலங்கந்தை பகுதியில் உள்ள நீரோடையிலிருந்து உயிரிழந்த நிலையில் ஆண் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இந்த சடலம் 14.08.2019 அன்று காலை மீட்கப்பட்டதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

நீரோடையில் சடலம் ஒன்று இருப்பதாக பிரதேச மக்களினால் பொலிஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டதை தொடர்ந்துஇ குறித்த இடத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டனர்.

40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரது சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதோடு, சடலம் இதுவரை அடையாளம் காணப்படாத நிலையில் மரண விசாரணைகளின் பின் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மஸ்கெலியா பொலிஸாரும், அட்டன் பொலிஸ் நிலைய கைரேகை பிரிவினரும் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -