எஸ்.பி. திஸாநாயக்க மற்றும் டிலான் பெரேரா ஆகியோர் மொட்டுவின் பக்கம் தாவினர்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் பொருளாளர் எஸ்.பி. திஸாநாயக்க மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா ஆகியோர், ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுண கட்சியில் இணைந்துள்ளனர்.

இன்று (29) முற்பகல், பொதுஜன பெரமுண கட்சியின் தேசிய அமைப்பாளரான பசில் ராஜபக்ஷவிடமிருந்து, அக்கட்சியின் உறுப்புரிமையை அவர்கள் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் இடம்பெற்ற ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில், சு.க. பொருளாளர் பதவியிலிருந்து எஸ்.பி. திஸாநாயக்க நீக்கப்பட்டதோடு, அதற்கு பதிலாக லசந்த அலகியவன்ன நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -