மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி மீளாய்வுக் கூட்டம்-படங்கள்



லைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சினால் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி தொடர்பான நுவரெலியா மாவட்டத்திற்கான மிளாய்வு கூட்டம் 27-08-2019 திகதியன்று ஹட்டன் பூல்பேங் தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெற்றது. 

மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் மேலதிக செயலாளர் விமலநாதன் தலைமையில் இடம்பெற்ற இந்த கூட்டத்தில் அமைச்சின் அதிகாரிகள், பெருந்தோட்ட மனிதவள நிதியத்தின் தலைவர், பனிப்பாளர் நாயகம் உள்ளிட்ட அதிகாரிகள், இந்திய வீடமைப்பு திட்டத்தினை நடைமுறைப்படுத்தும் நிறுவனங்களான இலங்கை செஞ்சிலுவை சங்கம், யு. என். ஹெபிட்டாட் நிறுவன அதிகாரிகள், அமைச்சர் பழனி திகாம்பரத்தின் அனைத்து பனியாளர்கள் கலந்து கொண்டதுடன் மக்கள் பிரதிநிதியாக நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ் உள்ளிட்ட முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர்கள், உள்ளுராட்சிமன்ற உறுப்பினர்கள், வட்டார அமைப்பளர்கள் பலரும் கலந்துக்கொண்டதுடன் இந்த மிளாய்வு கூட்டத்தின் தொடர்புக்காக அமைச்சின் இணைப்புச் செயலாளர் ஜி. நகுலேஸ்வரன் மேற்கொண்டதற்க்கு அமைய பதுளை, கண்டி, இரத்தினபுரி, மாத்தளை, கோகாலை, களுத்துறை, காலி, மாத்தறை மாவட்டங்களில் மீளாய்வு கூட்டங்கள் இடம்பெறலாம் என்னும் அமைச்சின் ஊடக பிரிவு தெரிவித்துள்ளன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -