கொழும்பு கோட்டை நீதவானிடம் இரகசிய சாட்சியமளித்த சஹ்ரானின் மனைவி!

ஹ்ரானின் மனைவி அப்துல் காதர் பாத்திமா ஹாதியா இன்று(15) கொழும்பு கோட்டை மஜிஸ்ட்ரேட் நீதிவானுக்கு இரகசிய வாக்கு மூலம் அளித்துள்ளார்.

ஷங்ரில்லா ஹோட்டலில் தற்கொலை தாக்குதல் நடத்திய, பயங்கரவாதிகளான மொஹம்மட் சஹ்ரான் மற்றும் மொஹம்மட் இப்ராஹீம் இல்ஹாம் அஹமட் ஆகியோரின் மரண விசாரணைகளின் சாட்சியங்களை ஆராயும் நடவடிக்கைகள் கோட்டை நீதிவான் ரங்க திஸாநாயக்க முன்னிலையில் இன்று இடம்பெற்றது. இதன்போதே அவர் இந்த இரகசிய வாக்கு மூலத்தை வழங்கியுள்ளார்.

இன்று இடம்பெற்ற விசாரணைக்கு, சஹ்ரானின் மனைவி, அவரது ஏழு வயது மகள், மற்றுமொரு தற்கொலை குண்டுதாரியான இல்ஹாம் அஹமடின் தந்தையான யுசுப் மொகமட் இப்ராஹிம், அவரது சகோதரன் ஆகியோரும் ஆஜராகியிருந்தனர்.ஐபிசி
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -