கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதே செயலகப் பிரிவிற்குட்பட்ட காவத்தமுனை பிரதேசத்தில் அமைந்துள்ள விசேட தேவையுடையோர் பாடசாலையின் எதிர்கால அபிவிருத்தி தொடர்பான ஆலோசனைக் கூட்டம் அண்மையில் பாடசாலையின் தலைவர் அஷ்ஷெய்க் அறபாத் ஸஹ்வி அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இதில் காவத்தமுனை பிரதேச அரசியல் முக்கியஸ்தர்கள் பள்ளிவாசல் ,சமூக நிறுவனங்களின் தலைவர்கள், விளையாட்டுக்கழக, இளைஞர் கழக உறுப்பினர்களின் பிரதிநிதிகள் அழைக்கப்பட்டு பாடசாலையின் விவகாரங்கள் ஆராயப்பட்டன .
குறித்த கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய ஓட்டமாவடி மேற்கு பிரதேச சபையின் கௌரவ உறுப்பினர் எம்.பீ.எம் .ஜஃபர் தனது சம்பளத்திலிருந்து மாதாந்தம் 5000 ரூபாய் நிதியை பாடசாலைக்கு வழங்குவதாக உறுதி அளித்தார்.
பாடசாலையின் தேவைப்பாட்டை உணர்ந்து இவ்வுதவியை புரிய முன்வந்த இவரின் முன்மாதிரியான இந்த நடவடிக்கைக்கு நிர்வாகம், பெற்றோர்கள், மாணவர்கள் சார்பாக நன்றியை தெரிவிப்பதாக விசேட தேவையுடைவோர் பாடசாலையின் செயலாளர் ஐ. சபீக் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
