உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர் தொடர்பில் வெளியாகும் செய்தியகள் பொய்யானது.

ஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர் அவர்களின் கைது தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளரால் உத்தியோகபூர்வமாக எதுவும் அறிவிக்கப்படாத நிலையில், அவரது குடும்ப அங்கத்தவர்களோ அல்லது அவரது வழக்கறிஞர்களோ அவரை சந்திப்பதற்கு இதுவரை அனுமதி வழங்கப்படாத நிலையில், தொடர்ந்தும் தடுப்புக் காவலில் வைக்கப்படுவதற்கான மேலிட அனுமதி கிடைத்திருக்கின்றதா என்பது தொடர்பில் எமக்கு எதுவும் தெரியப்படுத்தப்படாத நிலையில், விசாரணையின் போது வெளிவந்ததாக மேற்கோள் காட்டப்பட்டு மீடியாக்களில் வெளிவரும் தகவல்களும் செய்திகளும் மிகவுமே கவலையை ஏற்படுத்துபவையாக உள்ளன.

இவ்வாறு முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் யாவும் நூற்றுக்கு நூறு பொய்யானவை என்பதை அவரைத் தெரிந்த அனைவரும் நன்கறிவர். அவ்வாறிருக்கையில் மீடியாக்கள் எவ்வித ஆதாரங்களும் உத்தியோகபூர்வ அறிக்கைகளுமின்றி வேண்டுமென்றே பொய்யாக இட்டுக்கட்டி ஆளுமைக் கொலையில் ஈடுபடுவது மிகவுமே கண்டிக்கத்தக்கதாகும்.

எதுவித அடிப்படைகளுமற்ற ஆளுமைக் கொலை நடவடிக்கைகள் எந்த வடிவத்திலிருந்தாலும் அவை முற்றாக தவிர்ந்து கொள்ளப்பட வேண்டும் என குடும்ப அங்கத்தினரான நாமனைவரும் உறுதியாக நம்புகிறோம். அந்த வகையில் மீடியா நிறுவனங்கள் யாவும் எனது தந்தையின் விடயத்தில் அதிகூடிய பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ள வேண்டியதன் அவசியத்தை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.Affan Hajjul Akbar
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -