ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைக்கலாம். மகிந்த ராஜபக்‌ஷ, ரணில் கூட்டாக அறிவிப்பு.

னாதிபதித் தேர்தலை ஒத்திவைப்பதில் தங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு தனித்தனியாக அதிகாரபூர்வமற்ற செய்திகளை அனுப்பியுள்ளதாக ஜனாதிபதி செயலகவட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

அத்துடன் ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்களை ஒரே தினத்தில் நடத்தப்பட வேண்டும் எனத் தெரிவித்தும் முன்மொழிவு ஒன்று அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவ் வட்டாரங்கள் தெரிவித்தன.

இதேவேளை ஐக்கிய தேசிய கட்சியின் சிரேஷ்ட அமைச்சர் ஒருவரை மேற்கோள்காட்டி வெளிவந்துள்ள தகவலிகளின்படி டிசம்பர் மாதத்துக்குள் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படுமென நம்புகிறார்கள். ஆனால் அடுத்த ஏப்ரல் வரை கூட அது ஒத்திவைக்கப்படலாம் என்று தெரிவித்தார்.

ஜனாதிபதி தனது பதவிக் காலம் குறித்து உச்சநீதிமன்றத்தின் கருத்தை மீண்டும் பெறலாம் என்றும் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக ஜனாதிபதித் தேர்தல் தாமதமாகலாம் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்கள் இரண்டையும் ஒரே நாளில் நடத்த வாய்ப்பு இருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், இந்த நேரத்தில், 19 ஆவது திருத்தம் எப்போது நடைமுறைக்கு வந்தது, அதன்படி அவரது ஜனாதிபதி பதவிக்காலம் எப்போது முடிவுக்கு வரும் என்று உச்சநீதிமன்றத்தில் ஜனாதிபதி கேட்க வேண்டும் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.ஐபிசி
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -