அஸ்ரப் ஏ சமத்-
புலோலியூர் ஆ. இரத்தினவேலோன் எழுதிய புலவொலி நுால் வெளியீட்டு வைபவம் 12.8.2019 பம்பலப்பிட்டிய சரஸ்வதி மண்டபத்தில் சாகித்தியரத்னா தெளிவத்தை ஜோசம் தலைமையில் நடைபெற்றது. நுாலின் முதற் பிரதியை திருமதி அபிராமி கயிலாசபிள்ளை -பொருளாளா் இந்து வித்தியாவிருத்திச் சங்கம் நுாலசிரியா் ஆ.இரத்தினவேலோனிடமிருந்து பெற்றுக் கொண்டாா். கலாசுரி திவ்யா அஜேனின் அபிநயசேத்ரா நடனப்பள்ளி மாணவிகளின் நடனமும் இங்கு இடம் பெற்றது
திரு.வே.கந்தசாமி, தலைவா் இந்து வித்தியா சங்கம் டாக்டா் தி. ஞானசேகரன். மூத்த பத்திரிகையாளா் வீ.தனபாலசிங்கம் ஆகியோா் ஆசியுரை வழங்கினாா்கள். அத்துடன் துணவியுா் கேசவன் வெளியீட்டுரை நிகழ்த்த நுால் நயவுரையை டாக்டா் ச.முருகானந்தன், ராணி சிதா ஆகியோா் நிகழ்த்தினாா்கள்.
இங்கு புலோலியுர் இரத்தினவேலனை பற்றி கூறுகையில் - ஈழத்து இலக்கிய உலகில் எழுத்தாளராக 18வயதில் தனது முதலாவது சிறுகததையை தினகரனில் வெளியீட்ட இரத்தினவேலன் தற்பொழுது 60 வயதை தாண்டியும் தமது எழுத்தினை நேசித்து தொடா்ந்து எழுதி வருகின்றாா். இவா் பதிப்பாளராக ஊடக முகாமையளராக நன்கறியப்பட்ட உன்னத ஆளுமை புலோலியுர் ஆ. இரத்தினவேலன் சிறந்த பல சிறுகதைகளை ஈழத்து இலக்கியத்துக்கு தந்துள்ளதோடு மீரா பதிப்பகத்தின் ஊடாக இவா் இதுவரையில் 104 நுால்களை பதிப்பித்து வெளியிட்டு எழுத்தாளா்கள ஊக்குவித்ததோடு ஈழத்து எழுத்தாளா்களது படைப்புக்களை தனது பந்தி எழுத்துக்களின் ஊடாக வெளி‘யுலகிற்கு கொண்டு வந்துள்ளாா். ..இவா் தமது பெயருக்கு முன்னாள் தமது தாய் மண்ணின் பெயரை இணைத்துக் கொண்டு இந்த ஊருக்கு பெருமைத் தேடித் தந்துள்ளாா். இவா் போன்று மேலும் பலா் இவ்வுரின் பெயரின் முன்நிலைப்படுத்தி எழுதி வருகின்றாா். நாம் எங்கிருந்தாலும் தான் பிறந்த மண்னை நேசிக்கும் எழுத்தாளா் புலோலேலியுர் எழுதிய சிறுகதைகளான - அறிமுக விழா, புதிய பயணம், விடியட்டும் பாா்ப்போம். நிலாக்காலம், நெஞ்சாங்கூட்டு நினைவுகள், காவியமாய் ..நெஞ்சில் ஓவியமாய்..., பத்தி எழுத்துக்கள் புதிய சகத்திரப் புலா்வின் முன் ஈழத்துச் சிறுகதைகள் , அண்மைக்கால அறுவடைகள் , புலவொலி, தோ்ந்தெடுத்த தொகுதிகளான - விடியலுக்கு முன் சிறுகதைகள், திக்கற்றவா்கள் சிறுகதை, இருபதாம் நுாற்றாண்டில் ஈழத்துச் சிறுகதைகள் ஆகியனவாகும். தினகரன், தினக்குரல். வீரகேசரி உள்ளநாட்டு வெளிநாட்டு சஞ்சிகைகளின் நுாற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் கட்டுரைகளை எழுதி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது
தொகுப்பு அஸ்ரப் ஏ சமத்



