2020 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை நாளைய தினம் மஹிந்த ராஜபக்ஷ அறிவிப்பார் - மஹிந்தாந்த அளுத்கமகே தெரிவிப்பு


க.கிஷாந்தன்-

ஐக்கிய தேசிய கட்சியின் இறுதி காலம் முடிவடைந்த நிலையில் நாட்டை வீணடித்த ஐக்கிய தேசிய கட்சிக்கு மக்கள் மீண்டும் வாக்களிக்க தயாராக இல்லை என கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தாநந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

நாவலபிட்டியில் உள்ள கட்சி காரியாலயத்தில் 10.08.2019 அன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,
நாங்கள் ஐக்கிய தேசிய கட்சிக்கு வேண்டிய வேட்பாளர்களை ஐனாதிபதி தேர்தலுக்கு நிறுத்துமாறு கூறுகிறோம். இதுவரையிலும் மலையகத்தில் உள்ள தொழிற்சங்கங்களை சார்ந்தவர்களும் வடகிழக்கில் உள்ளவர்களும் எம்மோடு கலந்துரையாடி தமக்கு ஆதரவு தருவதாக கூறியிருக்கிறார்கள்.

தற்பொழுது நாட்டில் உள்ள பிரதான பிரச்சினைகள் தான் தேசிய பாதுகாப்பு நாட்டுக்கு தேவையான பாதுகாப்பு தலைவர், அதேபோல் நாட்டை கட்டியெழுப்பகூடிய தலைவர் மற்றும் ஒழுக்கத்தை பாதுகாக்க வேண்டிய ஒரு தலைவர். எனவே இந்த அனைத்து தகுதிகளும் எமது ஜனாதிபதி வேட்பாளர் கோட்டபாய ராஜபக்ஷவிற்கு இருக்கின்றது.

நாளை சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமைத்துவத்தை மஹிந்த ராஜபக்ஷ பொறுபேற்கும் நாள். ஆகையால் அனைத்து ஏற்பாடுகளும் தற்பொழுது ஏற்பாடு செய்யபட்டுள்ளது. அதேபோல் இந்த நாட்டின் எதிர்கால தலைவர் யார் என்பதை தீர்மானிக்க போகும் ஒரு முக்கியமான நாள். 2020 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை நாளைய தினம் மஹிந்த ராஜபக்ஷ அறிவிக்க இருக்கிறார்.

இந்த சந்தோசமான நாளை கொண்டாட அனைவருக்கும் நாங்கள் அழைப்பினை விடுக்கின்றோம். நாளைய தினம் இடம் பெறவிருக்கின்ற நிகழ்விற்கு தேசிய கொடியினை ஏந்தியவாரு பாற்சோறு மற்றும் இனிப்பு பண்டங்கள் சமைத்து அனைவரையும் இந்த சந்தோசத்தினை பகிர்ந்து கொள்ளுமாறு நாங்கள் கேட்டு கொள்கின்றோம்.

இதுவரையிலும் நாட்டில் 14500 கிராம சேவக பிரிவுகளிலும் இந்த சந்தோசத்தினை பகிர்ந்து கொள்ள ஏற்பாடுகள் செய்யபட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -