1000 கிராமங்களுக்கு குடிநீர் வழங்கும் “பிரஜா ஜல அபிமானி” வேலைத்திட்டம்

1000 கிராமங்களுக்கு குடிநீர் வழங்கும் “பிரஜா ஜல அபிமானி” வேலைத்திட்டத்தின் கீழ், கண்டி மாவட்டத்தில் முதற்கட்டமாக செயற்படுத்தப்படும் 11 திட்டங்களுக்கான மீளாய்வுக் கூட்டம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் வெள்ளிக்கிழமை (16) பேராதனை, கெட்டம்பேவில் அமைந்துள்ள தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் பிராந்திய சேவை மத்திய நிலையத்தில் நடைபெற்றது.
கூட்டத்தில் கலந்துகொண்ட செயற்றிட்டங்களுக்குப்பொறுப்பான கிராமிய அமைப்புகளின் முக்கிஸ்தர்கள், தாங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சரிடம் எடுத்துரைத்தனர். இவற்றை செவிமடுத்த அமைச்சர், பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு காணைப்பட்டு டிசம்பர் 31ஆம் திகதிக்குள் குடிநீர் திட்டங்களை பூர்த்திசெய்ய வேண்டுமென பணிப்புரை விடுத்தார்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -