இனவாதம், மதவாதம் கோலோச்சிய இந்த காலகட்டத்தில் அரசியலையும் அரசாங்கத்தையும் முன்னின்று வழி நடத்துவது மதகுருமாரே : சட்டத்தரணி ஏ.எல்.எம். றிபாஸ். !!
இனவாதம், மதவாதம் கோலோச்சிய இந்த காலகட்டத்தில் அரசியலையும் அரசாங்கத்தையும் முன்னின்று வழிநடத்துவது மதகுருமாரே என தேசிய காங்கிரசின் சட்டவிவகார, கொள்கை அமுலாக்கள் செயலாளரும், கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினருமான சட்டத்தரணி ஏ.எல்.எம்.றிபாஸ் தெரிவித்தார்.
இலங்கை நிர்வாக சேவை அதிகாரியும், எழுத்தாளருமான எம்.எம்.நௌபல் அவர்களின் "ஆத்மாவின் ஒரு துளி வெட்கம்" கவிதை தொகுப்பு நூல் வெளியீட்டு விழா இன்று (07) மருதமுனை பொது நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினரும், கவிஞருமான சட்டத்தரணி ஏ.எல்.எம். றிபாஸ் (அலறி) அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தென்கிழக்கு பல்கலைக்கழக தமிழ் மொழித்துறை தலைவர் பேராசிரியர் றமிஸ் அப்துல்லாஹ், பிரபல எழுத்தாளர்களா ன உமா வரதராஜன், மருதமுனை ஹஸன், ஆசுகவி அன்புடீன், மன்சூர் ஏ காதிர், என முக்கிய பல இலக்கியவாதிகள் பலரும் கலந்து கொண்டனர். இங்கு உரையாற்றும் போதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.
நூல் விமர்சனத்தை கவிஞர் டீன் கபூர், கலாநிதி சத்தார் எம். பிர்தௌஸ், ஏறாவூர் சப்றி, கே.எல்.நப்லா, எம்.ஆபித் ஆகியோர் நிகழ்த்தினர். முதல் பிரதியை கல்முனை பிரதேச செயலக பிரதம முகாமைத்துவ உதவியாளர் எஸ்.எம்.ரபாய்டீன் பெற்றுக்கொண்டார்.