கல்முனைக்கான எல்லைகள் சரியான அடிப்படையில் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லாத வகையில் நிர்ணயம் செய்யப்பட வேண்டுமென முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினரும் அம்பாரை மாவட்ட பொருளாளருமான ஏ.சி. யஹ்யாகான் தெரிவித்துள்ளார்.
சற்றுமுன் ஊடகங்களுக்கு வழங்கிய விஷேட அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கல்முனை எங்களது அடையாளமாகவும் இருக்கிறது. இதனை அழித்து அவர்களுடைய தேவைக்கேற்ப பிரித்துக்கொள்ள அனுமதிக்க முடியாது.
தமிழர் தரப்பினர் கேட்கின்ற நியாயமான எல்லையை ஏற்றுக்கொள்வோம், அதை பிரித்தும் கொடுப்போம். ஆனால் முஸ்லீம் சமூகத்தின் ஆள்புல எல்லைகள் மிகவும் துல்லியமாக வரையறுக்கப்பட்டாக வேண்டும். அவ்வாறு நடைபெறாமல் அரசை பயம்காட்டி நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வந்து காரியம் சாதிக்க நினைப்பது அவரது மடமைத்தனமாகும்.
முஸ்லிம் காங்கிரஸின் முட்டில்தான் இந்த அரசாங்கம் இன்னும் பயணிக்கிறது. முட்டை எடுத்து விட்டால் நடுவீதியில் இந்த அரசாங்கம் வரும் என்பதை அவர் உணர வேண்டும் என்றும் ஏ.சி. யஹ்யாகான் தெரிவித்துள்ளார்.