அஸ்ரப் ஏ சமத்-
கொழும்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட சகல பொலிஸ் நிலையப் பொருப்பதிகாரிகள், உதவி பொலிஸ் அத்தியட்சகா், பொலிஸ் அத்தியட்சகா் கொழும்பு மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபா் ஆகியோறுக்கு பள்ளிவாசல்கள் கடமைகள் மற்றும் அங்கு நிறைவேற்றும் 5 நேரத் தொழுகைகள், மௌலவிமாா்களது பொறுப்புக்கள்., மத்ரசாக்கள் மற்றும் முஸ்லிம் விவாக, சட்டங்கள் வகாபிசம் ,தப்லிக் , தௌகீத் கொள்கைகள் பற்றி அஸ்சேக் அம்மாா் அகாம்டீன் அவா்களினால் விளக்கம் அளிக்கப்பட்டது.
இந் நிகழ்வினை கொழும்பு மாவட்ட பள்ளிவாசல்கள் சம்மேளனம் நேற்று (28ஆம் திகதி வெள்ளவத்தை மெரைன் கோட்டலில் ஏற்பாடு செய்திருந்தது.
கொழும்பு பிரதிப் பொலிஸ் மாஅதிபா் சம்பிக்க சிறிவர்த்தன- இங்கு உரையாற்றுகையில்
நான் புத்தளம் பகுதியில் பிரதிப் பொலிஸ் மா அதிபராகக் கடமையாற்றும் போது அங்கு ஒவ்வொரு ஊரிலும் 25 பேர்கள் கொண்ட முஸ்லிம்கள் மௌலவிகள், அப்பிரதேச பன்சலை பிரநிதித்படுத்தும் பௌத்தமத தேரா்கள் 25 பேர்கள் கொணட கமிட்டி அமைக்கப்பட்டது.
அங்கு பொலிஸ் நிலையத்திற்கு வரும் மத, இனரீதியாக எழும் பிரச்சினைகள், சந்தேகங்கள் பற்றி இந்த கமிட்டி கூடி கலந்துரையாடி தீா்த்துக் கொள்வாா்கள். இரண்டு சமுகத்திற்கும் ஏற்பட்ட பிரச்சினைகள் சந்தேகங்களை அவா்களே தீர்த்துக் கொள்கினற்னா்.
அதே போன்று கொழும்பிலும் ஏற்படுத்தினால் நன்மை பகிக்கும். இவ்வாறாக முஸ்லிம்களது மதரீதியான பிரச்சினைகள், தெளிவுகளை பொலிஸாா் பள்ளிவசால்கள் சம்மேளனம் ஊடாக அடிக்கடி ஒன்று கூடி தெளிவுகளை தருவது மேலும் நன்மை பயக்கும்.
அத்துடன் இங்கு சமுகமளித்திருந்த பௌத்த மதகுருமாா்களும் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகளும் தாங்கள் நாளாந்தம் முஸ்லிம்களது மதம் சம்பந்தப்பட்ட முறைப்பாடுகள் பற்றி சட்ட திட்டங்களை் பற்றியும் கேள்விகளை கேட்டு அவா்களது சந்தேகங்களிருந்து தெளிவுகளை மௌலவி அம்மாாிடம் இருந்து பெற்றுக் கொண்டனா்.
அங்கு சமுகளித்திருந்த பொலிஸ் அதிகாரிகள் - தப்லிக் என்றால் என்ன ? வீடுகளில் மத்ராசாக்கள் வைக்கமுடியுமா? தலாக் தலாக் தலாக் விவகரத்து எ்னன ? 15 வயது வந்த முஸ்லிம் சிறுமி திருமண முடிக்க முடியுமா? வாபிஸம் என்றால் என்ன ? மீண்டும் தேசிய தௌகீத் பயங்கரவாதிகள் மீணடும் தாக்குதல்களில் ஈடுபடுவாா்களாக என அங்கு கேள்விகள் எழுப்பட்டன.

மௌலவி அம்மாா் உரிய பதிலையும் விளக்கங்களையும் அளித்தாா்.