சமூக ஒற்றுமைகான பயணம் தொடரும்-பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப்


ஹஸ்பர் ஏ ஹலீம்-

சில இனவாதிகள் இணைந்து நாட்டில் பாரிய இனக்கலவரத்தை ஏற்படுத்த முயற்சித்தமையினால் எமது முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்பு கருதியே பதவிகளை துறந்தோம் என துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப் தெரிவித்தார்.

ஜனாதிபதி முன்னிலையில் நேற்று பிரதியமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டு இன்று (30) கொழும்பில் உள்ள பிரதியமைச்சர் அலுவலகத்தில் வைத்து தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்கும் நிகழ்வின் போதே இவ்வாறு தெரிவித்தார்.

இதில் அமைச்சின் மேலதிக செயலாளர்கள், உயரதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டார்கள்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்

பதவிகளை துறந்து ஜனாதிபதி,பிரதமர் ஆகியோர்களுக்கிடையில் பல கோரிக்கைகளை முன்வைத்தோம்.

பயங்கரவாத தாக்குதல்களின் பின் கைது செய்யப்பட்ட அப்பாவி இளைஞர்களை விடுதலை செய்ய வேண்டும், டாக்டர் ஷாபியின் விடுதலை, கண்டி திகன குருணாகலில் இடம் பெற்ற இனவாத தாக்குதல்களினால் சேதமாக்கப்பட்ட பள்ளிவாயல்கள்,வீடுகள், வியாபாரத் தளங்களுக்கு நஷ்ட ஈடுகளை வழங்குதல், மத விழுமியங்களை பாதுகாக்கக் கூடிய சட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தோம் .

இதில் 2000 க்கும் மேற்பட்டோர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள் எதிர்வரும் வாரங்களில் இழப்பீடுகள் வழங்கப்படும் என அரசாங்கம் எம்மவர்களின் கோரிக்கையை ஏற்று முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது தெரிவித்ததை அடுத்து சமூகத்தின் விடிவுக்காக மீண்டும் அமைச்சு பொறுப்புக்களை ஏற்றிருக்கிறோம் .

அமைச்சர் றிசாட் மீது குற்றம் சுமத்தப்பட்டு அவருடைய விடயங்களில் நாட்டில் காணப்படும் பாதுகாப்பு துறை, நீதிமன்றம் போன்ற பல விடயங்களிலும் குற்றமற்றவர் என நிரூபனம் செய்துள்ளது முஸ்லிம்களை பயங்கரவாதிகள் எனக் கூறுவோருக்கு அன்றைய பயங்கரவாத தாக்குதலின் பின் பயங்கரவாதிகளை காட்டிக் கொடுத்தவர்களும் எமது சமூகத்தினரே .

ஆயிரம் வருடங்களுக்கு மேலாக நல்லுறவுடன் சகவாழ்வை நோக்கி இந்த நாட்டில் பயணித்த எம் சமூகம் மீண்டும் நிலையான பாதுகாப்போடு வாழ்வதற்கு உறுதுணையாக இருப்போம்.

மீண்டும் பயங்கரவாதம் அற்ற நிலையை இல்லாமல் ஆக்கி நாட்டில் ஒரு சிறந்த நல்லுறவை வளர்க்கக் கூடியவர்களாக அனைத்து மக்களிடத்திலும் எமது சேவையை கொண்டு செல்லக்கூடிய வகையில் இந்த பதவிகளை கொண்டு செயற்படுவோம் என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -