சிலாபம் – மாதம்பை நகரில் ( பழைய நகர்) இரும்பு சேகரித்து விற்கும்
கடையொன்றில் நேற்று (02) அதிகாலை இரண்டு மணியளவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
குறித்த தீ விபத்தின் காரணமாக இரும்புக் கடை முன் நிறுத்தி வைக்கபட்டிருந்த லொறியொன்றும் முழுமையாக எரிந்துள்ளதாகவும், அத்துடன் மற்றுமொரு லொறி பகுதியளவில் எரிந்துள்ளதாகவும் மாதம்பை பொலிஸார் தெரிவித்தனர். பிரதேசவாசிகள் மற்றும் தீயணைப்புப் பிரிவினர் ஒன்றிணைந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இத்தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை, சேதங்களின் விபரங்கள் பற்றி தெரியவில்லை என்றும் மாதம்பை பொலிஸார் குறிப்பிட்டனர்.