அதுரலிய ரத்ண தேரருக்கு சவால் விட்டிருக்கும் ரிஷாத் பதியுதீன்.



யிர்த்த ஞாயிறு தாக்குதல்களை அடுத்து முஸ்லிம் அரசியல் தலைவர்களுக்கு எதிராக முன்வைத்துவரும் குற்றச்சாட்டுக்களை நீதிமன்றத்தின் ஊடாக நிரூபித்துக் காட்டுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரருக்கு முன்னாள் வர்த்தகத்துறை அமைச்சர் ரிஸாட் பதியுதீன் சவால் விடுத்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் குறித்த விசாரணைகளுக்கு ஒருபோதும் இடையூறு விளைவிக்கவில்லை என்று மீண்டும் உறுதிப்படுத்தியுள்ள ரிசாத் பதியுதீன், தாம் உள்ளிட்ட முஸ்லிம் அமைச்சர்கள் எந்தவொரு குற்றமும் இழைக்கவில்லை என்பதை அரச தலைவரும், பிரதமரும் அறிந்து வைத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா அரசாங்கத்தின் முன்னாள் வர்த்தகத்துறை அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தனக்கு எதிராக ஊடகங்களில் வெளியிடப்பட்டு வருகின்ற பொய்யான பிரசாரங்கள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ஸ மற்றும் எஸ்.பி திஸநாயக்க உள்ளிட்ட சிலருக்கு எதிராக பொலிஸ் தலைமையகத்தில் அண்மையில் முறைப்பாடொன்றை பதிவு செய்திருந்தார்.

அந்த முறைப்பாடு தொடரில் மேலதிக தகவல்களையும் ஆவணங்களையும் வழங்கும் நோக்கில் இன்றைய தினம் முற்பகல் 10.30 மணி அளவில் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் திட்டமிடப்பட்ட குற்றங்களை தடுக்கும் பொலிஸ் குற்றப்புலனாய்வுப் பிரிவுக்குச் சென்று வாக்கு மூலம் ஒன்றை வழங்கினார்.

இதனையடுத்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் தான் எந்தவொரு பிழையும் செய்யவில்லை என்று கூறினார்.அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்

‘எனக்கு எதிராக பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து ஊடகங்களிலும் பிரசாரங்கள் வெளியாகி இருந்தன. அவற்றுக்கு எதிராக முறையிட்டிருந்த நிலையில் அதுகுறித்த மேலதிகத் தகவல்களை பெற்றுக்கொள்ளவே இன்று அழைக்கப்பட்டிருந்தேன். ஊடகங்களில் உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலுக்குப் பின்னர் பொய்யான குற்றச்சாட்டுக்கள் எனக்கு எதிராக முன்வைக்கப்பட்டிருந்தன. சதொச வாகனங்கள் பயன்பாடு குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச பலதரப்பட்ட குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தார். இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் குறித்து முறையிட்டிருந்தேன். அன்றைய தினம் பொலிஸ்மா அதிபரிடமும் முறையிட்டிருந்தேன். எந்தவொரு பிழையும் நான் செய்யவில்லை. உண்மை வெல்லும்.

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலுக்குப் பின்னர் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவை நியமிக்குமாறு எதிர்க்கட்சியும் ஆளுங்கட்சியுமே சபாநாயகரிடம் கோரிக்கை முன்வைத்திருந்தன. பின்னர் தெரிவுக்குழு அமைக்கப்பட்டு எனக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு நானும் சாட்சியளித்தேன். நான் எந்த குற்றமும் செய்யாத நாடாளுமன்ற உறுப்பினர். உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலுக்குப் பின்னர் அதனுடன் தொடர்புடைய அனைவருக்கும் அதிகபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தான் இருக்கின்றேன். நானும் எனது சமூகமும் அந்த தரப்பினருக்கு உச்சதண்டனை வழங்கப்படுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருக்கின்றோம். இருப்பினும் எமக்கு எதிராகவும் முஸ்லிம் சமூகத்துக்கு எதிராகவும் அரசியல் இலாபத்துக்காக எதிர்க்கட்சியினர் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர். பொலிஸார்,பாதுகாப்பு பிரிவினர் விசாரணை செய்து சம்பவத்துடன் தொடர்புடைய அனைவரையும் கைது செய்துள்ளனர். விசாரணைக்கு இடையூறு செய்வது முறையல்ல.

எனக்கும் அல்லது எனது குடும்பத்தாருக்கும் 3000 ஏக்கர், 7000 ஏக்கர் என்று காணிகள் இருப்பதாக அண்மைக்காலமாக சிலர் கூறிவந்தனர். இறுதியாக 8000 ஏக்கர் வரை அந்த எண்ணிக்கை சென்றது. ஆனால் அவ்வாறு எனக்கு எந்தவொரு காணியும் இல்லை. நான் வளைத்துப்போட்டதாக கூறப்படுகின்ற காணிகள் இவ்வாறு இருந்தால் அவற்றை அரசுடைமையாக்குமாறு நானே நாடாளுமன்றத் தெரிவுக்குழு முன்பாக கூறியிருக்கின்றேன். வில்பத்து வனவிவகாரத்தில் ரத்ன தேரர் பல வருடங்களாக இதனை கூறிவருகின்றார். 

எனக்கு எதிராக முறைப்பாடு செய்து வழக்கு தொடர்ந்து நீதிமன்றத்தின் ஊடாக அதனை நிரூபித்துக் காண்பிக்குமாறு ரத்ன தேரருக்கு நான் கூறுகின்றேன். ரத்ன தேரர் அன்று உண்ணாவிரதம் இருந்தபோது இன்னுமொரு தேரர் அங்கு சென்று முழு நாடுமே தீப்பற்றி எரியப்போகிறது என்று எச்சரித்ததை அடுத்து நாடு அழிவுப்பாதைக்கு செல்லாமல் நாட்டின் நற்பெயர் பாதிக்கப்படாமல், சுற்றுறலாத்துறையை கருத்திற்கொண்டு மற்றும் இனங்களிடையே ஐக்கியத்தை நினைத்துதான் நாங்கள் இராஜினாமா செய்தோம். எமக்கு அமைச்சுப் பதவிகள் பெரிதல்ல. 

ஜனாதிபதியும் பிரதமரும் மீண்டும் பதவிகளை ஏற்கும்படி கூறினார்கள். ஆனாலும் ஜனாதிபதியும் பிரதமரும் முழு நாடுமே நாங்கள் குற்றம் செய்யவில்லை என்பதை அறிவார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -