பொலிஸ் மா அதிபருக்கும் பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கும் இலங்கையில் நடைபெற்று வரும் விடயங்களை அடையாளம் கண்டு கொள்ள முடியாமல் போயுள்ளதாகவும், அரசாங்கத்துக்குள் இன்னுமொரு அரசாங்கம் செயற்படுவதாகவும் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
இன்று (02) கிருலப்பனையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் தேரர் இதனைக் கூறியுள்ளார்.
இந்த நாட்டில் உள்ள வர்க்க ரீதியிலான சட்டத்தை பொலிஸ் மா அதிபருக்கு அடையாளம் கண்டு கொள்ள முடியாதுள்ளதா? மத ரீதியிலான சட்டங்களை அடையாளம் கண்டுகொள்ள முடியாதா? அரசாங்கத்துக்குள் இன்னுமொரு அரசாங்கத்தை கொண்டுசெல்ல இன்னுமொரு குழுவுக்கு அனுமதிக்க முடியுமா? இஸ்லாம் வஹாப்வாத அடிப்படைவாதிகள் நாட்டில் அவ்வளவுக்கு ஊடுருவியுள்ளனரா? எனவும் ஞானசார தேரர் கேள்வி எழுப்பியுள்ளார்.டைசி
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -