டிக்கோயா வைத்தியசாலையின் மலசல கூட சுத்திகரிப்பு பகுதி செயலிழப்பால் பல்வேறு சீர்கேடுகள் ஏற்பட்டுள்ளதாக பொது மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.


ஹட்டன் கே.சுந்தரலிங்கம்-
ஹட்டன் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையின் புதிய வைத்தியசாலை கட்டட தொகுதியின் மலசல கூட சுத்திகரிப்பு பகுதி கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக செயலிழந்து காணப்படுவதனால் பிரதேசத்தில் பல்வேறு சூழல் சீர் கேடுகள் ஏற்பட்டுள்ளதாக பொது மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
குறித்த வைத்தியசாலைக்கு சிகிச்சை பெறுவதற்காக நாளாந்தம் மஸ்கெலியா, பொகவந்தலா, நோர்வூட் கொட்டகலை, ஹட்டன்,நல்லதண்ணி,லக்ஸபான,நோட்டன்பிரிஜ்,வட்டவளை உள்ளிட்ட தோட்டங்களை அண்டிய சுமார் ஆயிரக்கணக்காக மக்கள் தமது சிகிச்சைக்காகவும் இந்த வைத்தியசாலையினை நடைபெறும் கிளினிக்காகவும் வருகை தருகின்றனர். ஆனால் குறித்த மலசல கூட பகுதியிலிருந்து அதிகாலையிலும் இரவு வேளையிலும் தூர்நாற்றம் வீசுவதனால் நோயாளர்களும் பிரதேச வாசிகளும் பெரும் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர்.
பலர் தங்களது மூக்குகளை மூடிக்கொண்டே கிவ் வரிசையில் நிற்பதனை காணக்கூடியதாக உள்ளன.
இந்த வைத்தியசாலைக்கு வரும் கர்பினித் தாய்மார்கள் மற்றும் சிறுவர்கள் துர்நாற்றம் காரணமாக மயக்கமடைவதாகவும் தெரிவிக்கப்படுவதுடன் பலருக்கு வாந்தியும்; ஏற்பட்டுள்ளன.
மழைகாலங்களில் இந்த மலசல கூட குழிகளிலிருந்து சுத்திகரிக்கப்படாத மலசல கூட கழிவு நீர் வெளியேறி வீதியில் வழிந்தோடுவதனால் பல்வேறு நோய்களுக்கு பொது மக்கள் உள்ளாகுவதாக பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த சுத்திகரிப்பு பகுதியில் சுத்திகரிப்பு பகுதி முற்றாக செயலிழந்துள்ளதுடன் இதன் தண்ணீர் வெளியேற்றும் இயந்திரங்களும் பழுதடைந்துள்ளன. இதன் காரணமாக இதில் உள்ள நீர் நேரடியாக சூழக்கு விடுவிக்கப்படுவதனால் பிரசேத்தில் பலவேறு நோய்கள் தொற்றும் அபாயமும் ஏற்பட்டுள்ளன.
இந்த துர்நாற்றம் மற்றும் கழிவு நீர் வெளியேற்றுவதற்காக வைத்தியசாலை நிர்வாகம் தற்காலினமாக குழாய்கள் போடப்பட்ட போதிலும் அவற்றினூடாக அசுத்த நீர் வெளியேறுவதனால் பிரதேசம் முழுவதும் துர்நாற்றம் வீசுவதாக பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதன் நிலைமை குறித்து உரிய அதிகாரிகளுக்கு வைத்தியசாலை நிர்வாகம் அறிவித்த போதிலும் இது வரை இந்த பிரச்சினை தீர்க்கப்படவில்லை. என வைத்தியசாலை நிர்வாகம் தெரிவிக்கின்றனர்.
குறித்த சுத்திகரிப்பு நிலை வைத்தியசாலையின் முன் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளதனாலும் இது செயலிழந்து போய் இருப்பதனாலும் மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
சுமார் 17 லட்சம் ரூபா இதனை புனரமைப்பதற்கு செலவாகும். என மதிப்பிட்ட போதிலும் இதனை செய்து தருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தோட்ட மக்கள் அதிமாக பயன்படுத்தும் வைத்தியசாலை என்பதனால் பொறுப்பு வாய்ந்தவர்கள் இதனை பாராமுகமாக இருந்து வருவதாக பொது மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
குறித்த வைத்தியசாலையிலிருந்து நேரடியாக சுத்திகரிக்கப்படாத மலசல கூட கழிவு நீர் காசல் ரி நீர்த்தேக்கத்தில் கலப்பதனால் இந்த நீரினை குழிப்பதற்காகவும் குடிப்பதற்காகவும் விவசாயத்திற்காகவும் பயன்படுத்துவதன் மூலம் பல்வேறு நோய்கள் ஏற்பட வாய்ப்பிருப்பதாக பலர் சுட்டிக்காட்டுகின்றனர்.
இது குறித்து சூழல் பாதுக்காப்பு அதிகார சபை மற்றும் சுகாதார திணைக்களங்கள் உள்ளுராட்சி சபைகள்,மகாண சபைகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் அறிந்திருந்த போதிலும் இது குறித்து அக்கறை செலுத்தாதிருப்பது மிகவும் கவலைக்குரிய விடயமென சூழல் பாதுகாப்பு அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.
ஹட்டன் டிக்கோயா அடிப்படை மருத்துவமனை இந்திய அரசாங்கத்தின் 1,200 மில்லியன் ரூபா நிதி.ஒதுக்கீட்டில் அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த வைத்தியசாலை கட்டடத்தினை 2017.05.12 திகதி இந்திய பிரதமர் நரேந்திர மோடியால்) பொதுமக்களின் பாவணைக்காக கையளிக்கப்பட்டன.
வழங்கப்பட்ட இந்திய மூன்று மாடி மருத்துவமனை கட்டடத்தில் 150 படுக்கைகள் கொண்ட வார்டு வளாகம், மருத்துவ உபகரணங்கள் பிரிவு, வெளி நோயாளர் பிரிவு , சிறப்பு மையம், தீவிர சிகிச்சை பிரிவு, மகப்பேறு வார்டு, அவசர சிகிச்சை பிரிவு, தொழிலாளர் அறை மற்றும் இரண்டு ஆபரேஷன் தியேட்டர்கள் ஆகியன உள்ளடங்குகின்றன.
ஒரு இரத்த வங்கி, தீயணைப்பு உபகரணங்கள் மற்றும் இரண்டு உத்தியோகபூர்வ குடியிருப்பு கட்டிடங்கள் வளாகம் மற்றும் ஒரு அடிப்படை மருத்துவமனைக்கு தேவையான பிற வசதிகள் ஆகியவை அடங்குவதுடன் முழுவதும் மிகவும் நவீமான முறையில் நவீன தொழிநுட்பத்தில் அமைக்கப்பட்டுள்ளன.
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரனில் விக்ரமசிங்கவின் அழைப்பின் பேரில் இந்தியப் பிரதமரால் புதிதாக கட்டப்பட்ட கட்டிட வளாகம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
எது எவ்வாறான போதிலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் மிக பிரதானமான டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையின் குறைபாடுகளை தீர்க்க வேண்டியது மக்கள் பிரதிநிதிகளின் கடமையல்லவா?என பொது மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.





எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -