மலையக இளைஞர் யுவதிகள் 75 பேருக்கு பெருந்தோட்ட சமூக தொடர்பாடல் வசதி அழைப்பாளர்கள் நியமனத்தை வழங்கி வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்த நிகழ்வானது பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர் பழனி திகாம்பரம்,
"50 ரூபா சம்பள பிரச்சினையில் மலையகத்தின் சில காட்டிக்கொடுத்த கருங்காலி கூட்டம் மக்களை ஏமாற்ற முயற்சிக்கின்றனர். 50 ரூபா தொடர்பில் குறைகூறும் சில கருங்காலி கூட்டம் 20 ரூபாவை மாத்திரம் வாங்கிக் கொடுத்துவிட்டு மக்கள் மத்தியில் பொய் கூறிக்கொண்டு திரிகின்றனர். யார் என்ன கூறினாலும் நானும் தலைவர் மனோ கணேசனும் 50 ரூபாவை பெற்றுக் கொடுப்போம். அமைச்சரவை கூட்டத்தில் நாம் இது குறித்து காரசாரமாக பேசியுள்ளோம். இந்த விடயத்தில் யார் தடையாக இருந்தாலும் நாம் விட்டுக் கொடுக்க மாட்டோம். 50 ரூபாய் வழங்குவதற்கு அரசாங்கம் இணைந்துவிட்டது அதனை வழங்கும் வழிமுறை குறித்து ஆராயவே குழு ஒன்றை அமைத்துள்ளது விரைவில் இந்த ஐம்பது ரூபாய் மக்களுக்கு கிடைக்கும் அதில் எவ்வித அச்சமும் கொள்ளத் தேவையில்லை. நாங்கள் மக்களின் பல தேவைகளை நிறைவேற்றி இருக்கிறோம் ஆனால் ஒன்றுமே செய்யாத கூட்டம் ஒன்று எங்களை விமர்சிப்பதையே வேலையாக செய்து வருகிறது அதனை கண்டு நாங்கள் அஞ்சவில்லை. அமைச்சர் நவீன் ராஜாங்க அமைச்சர் உடன் இணைந்து சம்பளத்தை பெற்று கூறுவதாக இவர்கள் கூறுகின்றனர் அது எப்படி முடியும் அரசாங்கத்தில் அமைச்சராக இருப்பதனால் எங்களுக்கு அதிகாரம் இருக்கிறது மக்களுக்கு நான் வழங்கிய உறுதியை கட்டாயம் நிறைவேற்றுவோம். ஆயிரம் ரூபாய் என்று சொல்லி 20 ரூபாயில் மக்களை ஏமாற்றியவர்கள் போல நாங்கள் இல்லை நாங்கள் ஐம்பது ரூபா மேலதிக கொடுப்பனவை அரசாங்கத்தின் சார்பில் கட்டாயம் தோட்டத் தொழிலாளர்களுக்கு வாங்கி கொடுப்போம். அப்போது இந்த குறை கூறும் காட்டிக்கொடுத்த கருங்காலி கூட்டம் எங்கு சென்று தங்களது முகங்களை வைத்துக் கொள்வார்கள் என்று தெரியவில்லை.
இன்று அரச நியமனம் பெற்றுக்கொண்ட மலையக இளைஞர் யுவதிகள் கட்சி பேதமின்றி பக்கச்சார்பின்றி மக்களுக்கு முடிந்த அளவு சேவை செய்ய வேண்டும். நான் தோட்டத் தொழிலாளியின் பிள்ளையாக இருந்து இன்று அரசாங்கத்தின் உயரிய அமைச்சுப் பதவியை வகிக்கின்றேன். அதன்மூலம் நான் எனது சமூகத்திற்கு என்னாலான அனைத்து சேவைகளையும் செய்து வருகிறேன். லயன் வீட்டில் இருந்த மக்களுக்கு வேறு பகுதியில் தனி வீடு கட்டி கொடுத்து இருக்கிறேன். மலையகத்தில் வீதிகள் அபிவிருத்தி செய்யப்படுகின்றன. சிறுவர் பராமரிப்பு நிலையங்கள் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளன. விளையாட்டு மைதானம் குடிநீர் கோயில் என்று பல துறைகளில் என்னுடைய அபிவிருத்தி பணிகளை முன்னெடுத்து வருகின்றேன். அதனை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. அது போலவே இன்று நியமனம் பெறும் மலையக இளைஞர் யுவதிகளும் நமது மலையக மக்களுக்காக இயன்ற அளவு தங்களுடைய சேவைகளை இதயசுத்தியுடன் செய்யவேண்டுமென கேட்டுக் கொள்கின்றேன். அரசாங்க தொழில் பெறும் அனைத்து இளைஞர் யுவதிகளுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்."
இவ்வாறு அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்.