மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குற்பட்ட றூகம்(உறுகாமம்) சுபைர் ஹாஜியார் வித்தியாலயத்தில் நெதர்லாந்து நாட்டை சேர்ந்த 75 வயதுடைய நெல்லி என்ற பெண்மணியின் நிதியுதவியினைக்கொண்டு மானவர்களுக்கு இலகுவாக குடிநீரை பெற்றுக்கொள்ளக்கூடிய வகையில் பொருத்தப்பட்ட மோட்டார் தொகுதி மானவர்களின் பாவனைக்காக உத்தியோகபூர்வமாக இன்று(04) கையளிக்கப்பட்டது.
வித்தியாலயத்தின் அதிபர் ஹஸ்ஸாலி ஸாஹிப் தலைமயில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் வலயக்கல்விப்பணிப்பாளர் Dr.SMMS.உமர் மௌலானா SLEAS கலந்து கொண்டு இத்தொகுதியினை மானவர்களின் பாவனைக்காக கையளித்தார்.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் நிர்வாக உத்தியோகத்தர் CM.ஆதம்லெப்பை,சமாதான சகவாழ்வுக்கல்விக்கான இணைப்பாளர் நாஸர், பாலர் கல்விக்கான பிரதிக்கல்விப்பணிப்பாளர் கலீல்,ஊர்ப்பிரமுகர்கள்,பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.
இதற்கு முன்னர் இப்படசாலை மாணவர்கள் குடிநீரை பெற்றுக்கொள்வதில் மிகுந்த சிரமங்களை எதிர்நோக்கி வந்ததுடன் மிகவும் பின்தங்கிய மீள்குடியேற்ற கிராமமாக காணப்படும் இக்கிராமத்திலுள்ள இந்த பாடசாலையின் வளர்ச்சிப்பணிக்கு குறித்த பெண்மணி இதற்கு முன்னரும் பல்வேறு உதவிகளை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.