இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகராலய அரசியல் ஆலோசர்கள் அப்துல்லா மஃறூப் எம்.பி யை சந்திப்பு...


ஹஸ்பர் ஏ ஹலீம்-

லங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகராலயத்தின் அரசியல் ஆலோசர்களுக்கும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஃறூப் ஆகியோர்களுக்குமிடையிலான சந்திப்பு இடம் பெற்றது.

குறித்த சந்திப்பானது இன்று (04) வியாழக் கிழமை மாலை நாடாளுமன்ற உறுப்பினரின் கிண்ணியா அலுவலகத்தில் இடம் பெற்றது.

இதில் இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகராலய அரசியல் ஆலோசர்களான மேரி ஜோஷ்சே, பீற்றர் பன்டி போன்றோர்கள் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளதுடன் இலங்கை நாட்டின் தற்போதைய அரசியல் நிலவரங்கள் மற்றும் தங்களது கட்சிசார்ந்த முன்னெடுப்புக்கள் , முஸ்லிம் அமைச்சர்களின் பதவி இராஜினமா தொடர்பான விடயங்களை அரசியல் ஆலோசகர்களால் கேள்வி எழுப்பப்பட்டது

இதற்கு பதிலளித்த நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஃறூப்

நாட்டில் அண்மையில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலை வண்மையாக கண்டிப்பதாகவும் ஸஹ்ரான் எனும் பயங்கரவாதி ஒரு முஸ்லிம் அல்ல முஸ்லிம் ஒரு போதும் தற்கொலை தாக்குதலை செய்யமாட்டான் இவ்வாறான ஐஎஸ் ஐஎஸ் பயங்கரவாதமென்பது உலக நாடுகளில் வாழ்கின்ற முஸ்லிம் நாடுகளை பலவீனப்படுத்துவதே இதன் நோக்கமாகும் மேற்கத்தேய நாடுகளால் உருவாக்கப்பட்டதே இந்த பயங்கரவாத இயக்கம்.

முஸ்லிம் அமைச்சர்கள் இராஜினாமா செய்திருக்காவிட்டால் நாட்டில் பாரிய கலவரம் ஏற்பட்டிருக்கும் அதனாலேயே கட்சிபேதமின்றி அனைத்து முஸ்லிம் அமைச்சர்களும் இராஜினாமா செய்து விட்டு அரசாங்கத்துக்கு சில கோரிக்கைகளை முன்வைத்திருக்கிறோம் ஹபாயா விவகாரம், பயங்கரவாத சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்தல் போன்றவற்றை கோரிக்கையிட்டு ஹபாயா விவகாரம் பிரச்சினைக்கு முடிவு எட்டியுள்ள நிலையில் ஏனைய விடயங்கள் பரிசீலிக்கப்பட்டு வருகிறது ஏனைய 200 க்கும் மேற்பட்ட அப்பாவி பொது மக்களை விடுதலை செய்ய வேண்டும் இது தவிர பல கோரிக்கைகளும் நிறைவேறும் வரை பதவிகளை ஏற்க மாட்டோம் என மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -