தரம் மூன்று மாணவர்களின் பண்டிகைக் கொண்டாட்டம்.

அகமட் எஸ். முகைடீன்-
ம்மாந்துறை தாறுல் உலூம் வித்தியாலய தரம் மூன்று ஏ வகுப்பு மாணவர்களின் பண்டிகைக் கொண்டாட்டம் வகுப்பாசிரியர் திருமதி முஜீனின் வழிகாட்டலில் இன்று (24) புதன்கிழமை பாடசாலையில் நடைபெற்றது.

இதன்போது குறித்த வகுப்பு மாணவர்கள் பௌத்த, இந்து, முஸ்லிம் மற்றும் கத்தோலிக்க மதங்களுக்கு ஏற்றவாறு நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டு அம்மதத்தவர்களினால் கொண்டாடப்படும் பண்டிகைகளை கொண்டாடினர்.

மேலும் குறிப்பிட்ட இனத்தவர்களின் கலை கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் ஆடை அணிந்து பாரம்பரிய உணவுகள் இதன்போது பகிர்ந்தளிக்கப்பட்டன.
மாணவர்கள் சகல இனத்தவர்களின் பண்டிகைக் கொண்டாட்டங்களையும் அறிந்துகொள்ளும் வகையில் இடம்பெற்ற இப்பண்டிகைக் கொண்டாட்டத்தில் தாறுல் உலூம் வித்தியாலய அதிபர் எம்.ஐ.எம். கலீல், ஆங்கில ஆசிரியர் எம்.எச்.எம். ஜிப்ரி ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்களின் உபசாரங்களை ஏற்றுக்கொண்டனர்.









இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -