கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மாகாண பணிப்பாளர் பொறியியலாளர் தர்மரெத்தினம் ஓய்வு பெறுவதையொட்டி அவரின் சேவையை பாராட்டி கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் பொன்னாடை போர்த்தியும் பரிசு பொருள் வழங்கியும் கௌரவித்தார்.
இந்நிகழ்வில் கருத்து தெரிவித்த பொறியியலாளர் ஷிப்லி பாறூக் மிக நீண்ட காலமாக மட்டக்களப்பு மாவட்டத்திற்கு இன மத பேதத்திற்கப்பால் மிக நேர்மையாகவும் இலஞ்சம் ஊழல்களுக்கப்பால் சேவையாற்றிய மாகாண பணிப்பாளரை பாரட்டுவதில் பெருமை அடைகின்றேன்.
மேலும் மட்டக்களப்பு மாவட்டம் மாத்திரமல்லாது முழு கிழக்கு மாகாணத்திற்கும் தனது சேவைக்காலத்திற்குள் தனது பொறுப்புக்களை உணர்ந்து நல்லமுறையில் சேவையாற்றிய பொறியியலளரை மட்டக்களப்பு மக்களின் சார்பாக நாம் பாராட்ட கடமைப்பட்டுள்ளோம்.
10 இலட்சம் பெறுமதியான சிறிய வீதி அபிவிருத்திகளை செய்துவிட்டு பல பாராட்டுக்களையும் மாலை அணிவித்து கௌரவிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் அரசியல்வாதிகளை பாராட்டுகின்ற நாம் பல கோடிக்கணக்கான அபிவிருத்திகளை எந்த ஆரவாரமும் இல்லாமல் தேவை அறிந்து கட்சிதமாக செய்து முடித்த இவ்வாறான படித்த பொறியியலாளர்களை கௌரவிக்க வேண்டும் என முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறூக் தெரிவித்தார்.

