கட்சி வேறுபாடுகளுக்கப்பால் முன்னின்று செற்படும் தவிசாளராக அமானுள்ளாவைக் காண்கின்றேன் - உறுப்பினர் ஜெமிலா ஹமிட் பெருமிதம்


ட்டாளைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட கிராமங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற எந்தவொரு அபிவிருத்தி வேலைத் திட்டங்களாக இருந்தாலும் அந்த வேலைகள் சரியாக இடம்பெற்று பொதுமக்களுக்குச் சென்றடைய வேண்டும் என்ற சிந்தனையுடன் முன்னின்று கட்சி பேதம், இன மத மற்றும் பிரதேச வேறுபாடுகளின்றி செயற்படுகின்ற ஒரு தவிசாளராக அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் ஏ.எல்.அமானுள்ள காணப்படுகின்றார் என தேசிய காங்கிரஸ் கட்சி பிரதேச சபை உறுப்பினர் திருமதி ஜெமிலா ஹமீட் தெரிவித்தார்.
அட்டாளைச்சேனை அறபா வட்டார 8 ஆம் பிரிவு பிரதேசத்திலுள்ள சில வீதிகள் மழை காலங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதனால் அவ்வீதியால் பயணிக்கின்ற பாடசாலை மாணவர்கள், வைத்தியசாலைக்குச் செல்கின்ற நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் பல சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர் என்ற விடயம் தொடர்பிலும், கோணவத்தை பொது நூலகத்திற்கு வாகண தரிப்பிடம் மற்றும் வடிகான்களுக்கான மூடிகள் இடுவது பற்றியும் தவிசாளரின் கவனத்திற்கு நேற்றய தினம் (23) கொண்டு வந்ததாகவும் கூறினார்.
அதனையடுத்து, குறித்த இடங்களை நேரடியாக பார்வையிடுவதற்காக உடனடி விஜயம் செய்து அந்த இடங்களை தவிசாளர் பார்வையிட்ட பின்னர் இந்தக் குறைபாடுகளை நிவர்த்தி செய்து தருவதாகக்கூறி, பிரதேச சபை செயலாளரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு இவ்வேலைகளை உடனடியாக செய்வதற்குரிய ஏற்பாடுகளை செய்யுமாறு பணிப்புரை வழங்கி அதற்கான உடனடி நடவடிக்கைகளையும் இன்றிலிருந்து ஆரம்பிக்கவேண்டும் என்றும் செயலாளிடம் வேண்டிக்கொண்டதாகவும் தெரிவித்தார்.

எந்தக் கட்சியினால் எவ்வாறான அபிவிருத்தி வேலைகள் கொண்டு வரப்பட்டாலும் அந்த வேலைத்திட்டங்களை கட்சி வேறுபாடு பார்த்து அதைத் தடுத்து நிறுத்தும் ஒருவராக அவர் ஒருபோதும் செயற்பட்டதில்லை. இவ்வாறான ஒரு தவிசாளர் அட்டாளைச்சேனைக்கு கிடைத்திருப்பது ஒரு வரப்பிசாதம் என்றுதான் நான் கூறுவேன். அதுமாத்திரமல்லாமல் அத்தனை அபிவிருத்தி வேலைத்திட்டங்களையும் தான் முன்னின்று அந்த அபிவிருத்தி வேலைகள் பொதுமக்களிடத்தில் சரியாக சென்றடையவேண்டும் என்ற தூர நோக்குச் சிந்தனையுடன் மிக வேகமாக இயங்கி வருகின்ற ஒரு தவிசாளராகவும் அவரைக் காண முடிகின்றது என்று பிரதேச சபையின் உறுப்பினர் திருமதி ஜெமிலா ஹமீட் மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -