காத்தான்குடி கல்விக்கோட்டத்தின் புதிய பிரதேசக்கல்விப்பணிப்பாளராக AGM.ஹக்கீம் SLEAS பிரதேசக்கல்வி அலுவலகத்தில் இன்று(08) தன்னுடைய கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.
காத்தான்குடி பிரதேசக்கல்வி பணிப்பாளராக கடமையாற்றி வந்த MACM.பதுர்தீன் அவர்கள் ஓய்வுபெற்று சென்றதைத்தொடர்ந்து பிரதிக்கல்விப்பணிப்பாளர் கடமைக்கு மேலதிகமாக காத்தான்குடி பிரதேசக்கல்விப்பணிப்பாளராக AGM.ஹக்கீம் SLEAS நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் நிர்வாக உத்தியோகத்தர் CM.ஆதம்லெப்பை,முன்னாள் பிரதேச கல்விப்பணிப்பாளர் MACM.பதுர்தீன் உற்பட பல்வேறு பாடசாலைகளின் அதிபர்களும் கலந்து கொண்டனர்.