ஹட்டன் கே.சுந்தரலிங்கம்-
மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமூதாய அபிவிருத்தி அமைச்சின் கீழ் மதத்தலங்களை மேம்படுத்தும் முகமாக ஹட்டன் நீக்ரோதாராராம விகாரையில் மிகவும் பழமை வாய்ந்த தர்மசாலையின் கூரையினை புனரமைக்கும் பணிகளை கடந்த 30 திகதி மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமூதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் அவர்களின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டன.
இந்த புனரமைப்பு பணிக்காக மலைநாட்டு புதிய கிராமங்கள் அபிவிருத்தி அமைச்சு சுமார் 28 லட்சம் ரூபா செலவிடப்படவுள்ளது.
இந்நத நிகழ்வில் மத்திய மாகாணசபை முன்னாள் உறுப்பினர்களான சோ.ஸ்ரீதரன்,ராம்,விகாரையின் விகாராதிபதி தர்சனபதி மஹாகம விமல தேரர் உட்பட ஹட்டன் டிக்கோயா நகரசபையின் முன்னாள் முதல்;வரும் உறுப்பினருமான அழகுமுத்து நந்தகுமார்,உட்பட அரசியல் பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.