அம்பகமுவ உடபுலத்கம பகுதியை சேர்ந்த 23 வயதுடைய சந்துன் மதுரங்க என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்தார் கொழும்பில் இருந்து ஹட்டன் பகுதியை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து
சபைக்கு சொந்தமான பேருந்தும் கினிகத்தேன பகுதியில் இருந்து ரஞ்சிராவ
பகுதிக்கு சென்ற ஊந்துருளியும் கினிகத்தேன பதுபொலபகுதியில் வைத்து நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞன் படுுகாயமடைந்து நாவலபிட்டி வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற வேலையிலே குறித்த இளைஞன் உயிர் இழந்தள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது
சம்பவம் தொடர்பில் பஸ்ஸின் சாரதி கைது செய்யபட்டுள்ளதாக கினிகத்தேன
பொலிஸார் தெரிவித்தனர் உயிர் இழந்த இளைஞனின் சடலம் நாவலபிட்டி மாவட்டவைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கபட்டுள்ளதாகவும் தெரிவித்த பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் கினிகத்தேன பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் .