வட்டவளை பொலிஸ் பிரிவுக்குட்ட வட்டவளை நகருக்கு சமீபமாக உள்ள வீடு ஒன்றில் கணவனை இரும்பு பொல்லால் தாக்கி கொலை செய்து விட்டு மனைவி வட்டவளை பொலிஸ் நிலையத்தில் சரண் அடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்..
இச்சம்பவத்தில் உயிரிழந்தவர் மூன்று பிள்ளைகளின் தந்தையான ஆறுமுகன் விஜயராமன் வயது 48 என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று (08) இரவு 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது. கணவன் மது அறுந்தி விட்டு வந்து தகராறு செய்து மனைவியை தாக்கியதாகவும்; இதனால் ஆத்திரமடைந்த மனைவி இரும்பு பொல்லால் தாக்கிய போது கணவன் உயரிழந்தாக இன்று அதிகாலை 3.00 மணியளவில் சரணடைந்த மனைவி தெரிவித்துள்ளார்.
இந்த கொலை குடும்ப தாகராறு காரணமாகவே; இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணையின் மூலம் தெரிய வந்துள்ளன.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய மனைவி வட்டவளை பொலிஸாரினால் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சடலம் அட்டன் நீதவானின் மேற்பார்வையின் பின் பிரேத பரிசோதனைக்காக நாவலபிட்டி வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன.
மேற்படி கொலை சம்பவம் குறித்து வட்டவனை பொலிஸார் மற்றும் அட்டன் கைரேகை அடையாள பிரிவு ஆகியன இணைந்து மேலதிக பரிசோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.