முத்தமிழ் வித்தகர் விபுலானந்த அடிகளாரின் இல்லத்துக்கு புது ஒளியூட்டிய மனோகணேசன் !!

நூருள் ஹுதா உமர்-
ந்துசமய விவகார அலுவல்கள் அமைச்சு மற்றும் இந்துசமய விவகார அலுவல்கள் திணைக்கள நிதி ஒதுக்கீட்டில் புனரமைப்பு செய்யப்பட்ட முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தர் பணி மண்டபத்தை மக்களுக்கு கையளிக்கும் நிகழ்வு இன்று காலை காரைதீவில் நடைபெற்றது.

பெயற்பலகைகளை திறந்து வைத்த அதிதிகள் சுவாமி விபுலானந்தரின் பிறந்த இல்லத்தை பார்வையிட்டதுடன், அறநெறி கல்விநிலையத்தையும் ஆரம்பித்து வைத்தனர்.
இந்நிகழ்வுக்கு தேசிய ஒருமைப்பாடு, அரச கருமமொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்துவிவகார அமைச்சர் மனோகணேசன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிறப்பித்தார். இந்நிகழ்வுக்கு அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் க. கோடீஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர் வேலுக்குமார் , அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு. ஜெகதீசன், காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கி.ஜெயசிரில், காரைதீவு பிரதேச சபை உறுப்பினர்கள், கல்முனை மாநகர சபை உறுப்பினர் அழக்கக்கோன், இந்து சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்கள பணிப்பாளர், காரைதீவு பிரதேச செயலாளர் எஸ். ஜெகதீசன், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -