மன்னார்-
பாராளுமன்ற உறுப்பினர்களான நாங்கள் எவ்வளவோ சிரமங்களின் மத்தியி கிராமங்களின் அபிவிருத்திகளுக்காக கொண்டு வரும் நிதிகளை திருப்பி அனுப்பாது பயன்படுத்துங்கள் என்று வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் வேண்டுகோள்
கடந்த வருடம் 2018 தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் அவர்களின் 2018ம் ஆண்டுக்கான குறித்தொதுக்கப்பட்ட நிதியில் பத்து மில்லியன் ரூபா துணுக்காய் மற்றும் மாந்தை கிழக்கு பிரதேச பிரதேச செயலகங்களால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது இதனால் அபிவிருத்தி வேலைகள் சில தடைபட்டதுடன் முன்னைய நிதியில் வேலைகளை பொறுப்பெடுதத்து செய்த அமைப்புகள் சில பாதிக்கப்பட்டிருந்தனர் இது சம்பந்தமா கிராம அமைப்புகள் சிவமோகன் எம்பியிடம் முறைப்பாடு செய்திருந்தார்கள்
இது சம்பந்தமாக உதயள் பத்திரிகைக்கு கருத்து தெரிவிக்கும் போதே சிவமோகன் எம்பி இவ்வாறு தெரிவித்தார்
வன்னி மாவட்டம் யுத்தத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட பிரதேசம் எமக்கு கிடைத்த சந்தர்ப்பங்களை பாவித்து துணுக்காய் மாந்தை கிழக்கு பிரதேசங்களுக்க பெருந்தொகையான நிதிகளை கம்பரெலிய வேலைத்திட்டங்கள் மூலம் ஒதுக்கியிருந்தேன் அப்படி ஒதுக்கப்பட்ட நிதிகள் திரும்பி செல்வது என்பது மிகவும் மோசமாக விடயம் துணுக்காய் புத்துவெட்டுவான் வீதிக்காக பத்து லட்சம் தேராங்கண்டல் பாடசாலைக்காக பத்துலட்சம் யோகபுரம் விதியாலயத்துக்காக பத்துலட்சம் ஐயங்குளம் வீதிக்காக இருபது லட்சம் மொத்தமாக அறுபது லட்சம் ரூபா துணுக்காய் பிரதேச செயலகத்திற்கும்
மாந்தை கிழக்கு பிரதேச செயலகப் பிரிவில் உள்ள பொன்நகர் பாடசாலைக்காக பத்து லட்சம் பாலிநகர் பாடசாலைக்காக பத்து லட்சம் கிடாபிடித்தகுளம் பாடசாலைக்காக பத்து லட்சம் என கிட்டத்தட்ட பத்து மில்லியன் பணம் என்னால் ஒதுக்கப்பட்டிருந்தது
இதில் அறுபது லட்சம் ரூபா பணம் திருப்பி அனுப்பப்பட்டதாக அரசாங்க அதிபரால் எனக்கு கடிதம் அனுப்பப்பட்டிருந்தது இந்த செயற்பாடானது பிரதேச செயலாளர்களின் செயற்படாத தண்மைகளையே காட்டுகின்றது புதுக்குடியிருப்பு ஒட்டுசுட்டான் கரதுரைப்பற்று போன்ற பிரதேச செயலகங்கள் எந்த ஒரு நிதிகளையும் திருப்பி அனுப்பவில்லை
இவர்களால் வேலைகளுக்கான ஒப்பந்தங்கள் வரையப்பட்டு ஒப்பந்தத்திற்கான ஆரம்பப்பணம் வழங்கப்பட்டு அனைத்து வேலைகளையும் அமைப்பு ஒப்பந்தகாரர்கள் முடித்திருக்கிறார்கள். கடந்த டிசம்பர் 31ல் பணத்தை திருப்பி அனுப்புவதாக இருந்தால் அந்தந்த பிரதெச செயலர்கள் பணங்களை திருப்பி அனுப்பப்போகிறோம் என்னும் அறிவித்தலை அமைப்புகளுக்கு கொடுத்திருக்க வேண்டும் எனவே சட்ட ரீதியிலும் இவர்கள் பாரிய பிழையை விட்டிருக்கிறார்கள் நிர்வாக ரீதியிலும் இவர்கள் பாரிய பிழையை விட்டிருக்கிறார்கள்.
இப்படி அக்கரையில்லாமல் செயற்பட்ட அதிகாரிகள் மீது உடனடியாக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் தவறும் பட்சத்தில் மக்கள் கிளர்து எழும்பொழுது எங்களால் எதுவும் செய்யமுடியாது என்பது என்னுடைய கருத்து உடனடியாக அரசாங்க அதிபர் இதற்குரிய நிதியை எங்கொ தேடி எடுத்து அபிவிருத்திக்கு வழங்க வேண்டும் அண்மையில் அரசாங்க அதிபர் எனக்கு ஒரு கடிதம் எழுதி இருந்தார் தடைபட்டு திருப்பி அனுப்பப்பட்ட வேலைத்திட்டங்களுக்காக புதிய நிதியில் தர வேண்டும் என்று அப்ப நிதி ஒதுக்க அனுமதி இல்லை ஏற்கனவே ஒதுக்கப்பட்ட அமைப்பின் பெயரை சட்ட ரீதியாக மீண்டும் ஒதுக்க முடியாத நிலை இருக்கிறது எனவே இந்த தவறுகளுக்கு பொறுப்பேற்க வேண்டும் அதற்கு தவறும் பட்சத்தில் வரும் விளைவுகளுக்கு அவர்களே பதில் சொல்பவர்களாக இருப்பார்கள் பாராளுமன்ற உறுப்பினர்களான நாங்கள் எவ்வளவோ கஷ்டப்பட்டு கொண்டுவரும் நிதிகளை செயற்படுத்தத்தெரியாமல் திருப்பி அனுப்புபவர்கள் எல்லாம் இந்த பதவியில் இருக்கக்கூடாது மாந்தை கிழக்கு பிரதெச செயலர் மற்றும் துணுக்காய் பிரதேச செயலர் இதற்கான சரியான பதிலை தர வேண்டும் என்று வன்னிநாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்தார்
இது தொடர்பாக மாந்தை கிழக்கு பிரதேச செயலர் செல்வி. றஞ்சனி அவர்களை தொடர்பு கொண்டு கேட்ட போது
மாந்தை கிழக்கு பிரதேச செயலகம் மக்களுக்காக வந்த எந்த நிதியையும் திருப்பி அனுப்பவில்லை கடந்த வருட இறுதியில் ஏற்பட்ட அரசியல் குழப்பநிலை காரணமாக சில தளம்பல் நிலைகள் இருந்தாலும் அவை அபிவிருத்திக்காக வந்த நிதிகள் திருப்பி அனுப்பப்படவில்லை ஒப்பந்தக்காரர்கள் கடந்த டிசம்பர் 31 திகதிக்கு முன்னர் அனைத்து வேலைகளையும் நிறைவு செய்து எம்மிடம் பில்களை சமர்ப்பித்திருந்தால் ஒப்பந்தகாரர்களுக்குரிய நிதிகள் விடுவிக்கப்பட்டிருக்கும் அவ்வாறு பில் தந்த தொகைகள் மாத்திரம் எங்களால் கொடுக்க முடிந்தது
குறிக்கப்பட்ட திகதிக்கு முன் வேலைகள் நிறைவு பெறாமல் பில் தொகைகள் காட்டப்படாமல் இருந்தால் நிதியினை அவர்கள் விடுவிக்கமாட்டார்கள் சிலர் நிறைவு பெறாத குறை பில்லை தந்துள்ளார்கள் அதற்கும் நாங்கள் நிதிகளை வழங்கியுள்ளோம் அமைப்புகள் தொடர்ந்து அடுத்த வருடமும் நிiறுறாத வேலைகளை செய்யலாம் என்று நம்பியிருந்திருக்கலாம் என்று மாந்தை கிழக்க பிரதேச செயலர் செல்வி றஞ்சனி தெரிவித்தார்
இது தொடர்பாக துணுக்காய் பிரதேச செயலர் கருத்து தெரிவிக்கையில் புத்துவெட்டுவான் வீதி தேராங்கண்டல்பாடசாலை யோகபுரம் விதியாலயம் ஐயங்குளம் வீதி போன்ற வேலைகள் தாமதமாவதற்கு கடந்த டிசம்பரில் ஏற்பட்ட அரசியல் தளம்பல் நிலை மற்றும் அதிகப்படியான மழை வெள்ளக்காலநிலை காரணம் ஆனால் டிசம்பர் 31ம் திகதியின் முன் நிறைவு செய்யப்பட்ட வேலைகளுக்கான பணம் வழங்கப்பட்டுவிட்டது டிசம்பர் 31ன் பின்னர் தாமதமாக நிறைவு செய்யப்பட்ட வேலைகளுக்கான பணங்களை எம்மால் விடுவிக்க முடியாமல் போய்விட்டது காரணம் இது தொடர்பாக பிரதமர் அலுவலகத்தினருடன் தொடர்பு கொண்டு கேட்போது இது பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான நிதி அவர்களை தொடர்பு கொள்ளுமாறு பதிலளிக்கப்பட்டது
இது தொடர்பாக குறித்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது என்று துணுக்காய் பிரதேச செயலாளர் பிரபாகர மூர்த்தி தெரிவித்தார்.