ஜனாதிபதியைச் சந்திக்க மறுக்கும் பாராளுமன்ற தெரிவுக்குழு ....

யிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற தெரிவுக்குழு உறுப்பினர்கள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்திப்பதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதியை சந்தித்து அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பில் தீர்மானம் மேற்கொள்வதற்காக முன்வைக்கப்பட்ட யோசனைக்கு பாராளுமன்ற தெரிவுக்குழுவில் பெரும்பான்மை உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதியை சந்திப்பது தொடர்பில் தெரிவுக்குழுவில் உள்ள உறுப்பினர் ஒருவர் மூலம் முன்வைக்கப்பட்ட யோசனை தொடர்பில் இன்று 2 மணியளவில் கூடிய தெரிவுக்குழுவில் கலந்துரையாடப்பட்ட வேளையில் குழுவின் பெரும்பாலான உறுப்பினர்கள் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர்.

தெரிவுக்குழுவின் நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதியை சந்திக்க தயாரில்லை என குழு உறுப்பினர்களான பேராசிரியர் ஜயம்பதி விக்ரமரத்ன மற்றும் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ ஆகியோர் தமது தனிப்பட்ட முடிவை தெரிவித்துள்ளனர்.

அவ்வாறு சந்திப்பதற்கு தேவையிருந்திருப்பின் தெரிவுக்குழு முதன்முறையாக கூடுவதற்கு முன்னால் ஜனாதிபதிக்கு குழு உறுப்பினர்களை அழைத்து கலந்துரையாடியிருக்க முடியும் என வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளதுடன் ஜனாதிபதி தொடர்பிலான விடயங்கள் பேசப்பட்டு வரும் நிலையில் இவ்வாறு சந்திப்பது முறையானது அல்ல எனவும் தெரிவித்துள்ளார்.

சபாநாயகர் கரு ஜயசூரிய இது தொடர்பில் தீர்மானம் ஒன்றை அறிவித்துள்ளதுடன் அதன்படி தெரிவுக்குழு அதன் நடவடிக்கைகளை முன்னெடுக்குமே தவிர ஏனைய தரப்பினருடன் நடவடிக்கைகளை மேற்கொள்வது நடைமுறையல்ல எனவும் தெரிவுக்குழு உறுப்பினர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -