வைத்தியர் ஷாபி தொடர்பில் -குருநாகல் பிரதி பொலிஸ்மா அதிபரை சீ.ஐ.டி.விசாரணை

ட்ட விரோத கருத்தடை விவகார குற்றச்சாட்டுக்களில் சி.ஐ.டி.யில் தடுத்து வைத்து விசாரிக்கப்பட்டு வரும் குருணாகல் வைத்தியசாலையின் பிரசவ மற்றும் மகப்பேற்று வைத்தியர் மொஹம்மட் ஷாபி விவகாரம் தொடர்பில் குருணாகல் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வசந்த கித்சிறி ஜயலத்திடம் சி.ஐ.டி. சிறப்பு விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

சி.ஐ.டி. தலைமையகமான நான்காம் மாடியில் உள்ள சமூக கொள்ளை தொடர்பிலான விசாரணைப் பிரிவுக்கு அழைக்கப்பட்ட அவரிடம் அங்கு 8 மணி நேர விசாரணைகள் நடத்தப்பட்டு சிறப்பு வாக்கு மூலம் பதிவு செய்யப்பட்டதாக சி.ஐ.டி.யின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

வைத்தியர் ஷாபி சிங்கள, பெளத்த பெண்களுக்கு கருத்தடை செய்ததாக தேசிய பத்திரிகை ஒன்று வெளியிட்ட செய்திக்கான ஆரம்ப தகவலை பிரதிப் பொலிஸ் மா அதிபர் கித்சிறி ஜயலத் வழங்கியதாக கூறப்படும் விடயம் மற்றும் வைத்தியர் ஷாபி தொடர்பில் சட்ட விரோத சொத்து குவிப்பு தொடர்பினை மையப்படுத்தி பிரதி பொலிஸ் மா அதிபர் முன்னெடுத்த விசாரணைகள் தொடர்பில் இதன்போது விரிவாக விசாரிக்கப்பட்டுள்ளது.

இந் நிலையில் பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜயலத்திடம் விஷேட வாக்கு மூலம் ஒன்றினை பதிவு செய்துகொண்டுள்ள சி.ஐ.டி. அவசியம் ஏற்படும் பட்சத்தில் மீளவும் விசாரணைக்கு அழைப்பதாக கூறி விடுவித்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -