நாளை (2019.06.10) ஆம் திகதி சேலை அல்லாத வேறு ஆடைகள் அணிந்து அலுவலகம் செல்பவர்களுக்கான சில ஆலோசனைகள்...


காலை 8.30 யிற்கு முன்னரே அலுவலகம் சென்று கையொப்பமிட்டு விட்டு உங்கள் கடமைகளை ஆரம்பியுங்கள்.
- கடமைக்கு செல்லாமல் லீவு எடுக்க விரும்புபவர்கள் தாபனக் கோவைக்கு அமைவாக உங்கள் லீவுகளை அறிவியுங்கள்.

- உங்களிடம் ஆடை பற்றி உங்களிடம் வினவும் உரிமை உங்களது மேலதிகாரிக்கு மாத்திரமே உரியது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

- சுற்று நிருபத்திற்கு அமைவாக ஆடை அணியவில்லை என கடமையிலிருந்து உங்களை தடுக்க முடியாது.

- *இலங்கை தண்டனைச் சட்டக் கோவையின் பிரிவு 183 யின் பிரகாரம் ஒரு அரச அலுவலரை கடமை புரிவதிலிருந்து தடுப்பது தண்டனைக்குரிய குற்றமாகும்.* ஆகையால், உங்களை கடமை புரிவதில் இருந்து தடுக்கவே முடியாது என்பதனை நன்றாக நினைவில் கொள்ளுங்கள்.

- முடிந்த வரை நல்ல முறையில் பேசி அவகாசத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள்.
- பிரதமர் அலுவலகத்தினால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையின் பிரதியினை உங்கள் வசம் வைத்திருந்து தேவைப்படின் சமர்ப்பியுங்கள்.

- அலுவலகத் தலைவர்கள் மறுதலிக்கும் பட்சத்தில் அவர்களிடம் மறுதலிப்பு தொடர்பில் எழுத்து மூல கட்டளையை பெற்றுக் கொள்ளுங்கள்.

- உங்களை கையொப்பமிடுவதிலிருந்து தடுக்க முடியாது. அதையும் மீறித் தடுத்தால் அது தொடர்பில் உங்கள் மேலதிகாரிக்கு ரெலி மெயில் மூலம் அறிவியுங்கள். அதன் பிரதியை வைத்துக் கொள்ளுங்கள்.

- இறுதியாக அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் கடமையை செய்ய விடவில்லை என முறைப்பாடு செய்யுங்கள்.
மேலதிகத் தகவல் தேவைப்படின் +94 77 230 1539 என்ற இலக்கத்தில் எம்மைத் தொடர்பு கொள்ளுங்கள்

-குரல்கள் இயக்கம்-
குரலற்றோருக்கான குரல்கள்

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -