08 பெண் தொழிலாளர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில்


எம் கிருஸ்ணா-
ட்டன் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட டிக்கோயா வனராஜா தோட்டபகுதியில் உள்ள
தேயிலை மலையில் தேயிலை கொழுந்து பறித்து கொண்டிருந்த 08பெண் தொழிலாளர்கள்
குளவி கொட்டுக்கு இலக்காகி டிக்கோயா கிழங்கன் ஆதாரவைத்தியசாலையில்
அனுமதிக்கபட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்

இந்த சம்பவம் 08.06.2019. சனிகிழமை காலை 09.30மணி அளவில் இடம்பெற்றதாக
ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்

வனராஜா தோட்டபகுதியில் உள்ள தேயிலை மலையில் பெண் தொழிலாளர்கள் கொழுந்து
பறித்து கொண்டிருந்த வேலையில் தேயிலை மலையின் அடிவாரத்தில் இருந்த குளவி
கூடு கலைந்து வந்து தொழிலாளர்களை தாக்கியதாக காயங்களுக்கு உள்ளான
தொழிலாளர்கள் தெரிவித்னர்

காயங்களுக்கு உள்ளான 08பெண் தொழிலாளர்களும் தொடர்ந்தும் சிகிச்சை
பெற்றுவருவதாக டிக்கோய கிழங்கன் ஆதாரவைத்தியசாலையின் வைத்தியர் ஒருவர்
தெரிவித்தார்















எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -