ஒலுவில் வைத்தியசாலையில் 02 மாடிக் கட்டிடத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு

எம்.எம்.ஜபீர்-
லங்கையில் தொற்றா நோயைக் கட்டுப்படுத்தும் நோக்கில் சுகாதார அமைச்சினால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டத்திற்கமைவாக உலக வங்கியின் 25 மில்லியன் செலவில் ஒலுவில் வைத்தியசாலையில் அமைக்கப்படவுள்ள ஆரம்ப வைத்திய பாரமரிப்பு நிலையத்தின் 02 மாடிக் கட்டிடத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.

ஒலுவில் வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் திருமதி ஏ.ஜீ.எஸ்.பைறூஸ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் முன்னாள் சுகாதார இராஜாங்க அமைச்சரும் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.சீ.பைசால் காசிம் பிரதம அதிதியாக கலந்து கொண்டு வேலைத்திட்டத்தினை ஆரம்பித்து வைத்தார்.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் எம்.சீ.அன்சார், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளார் டாக்டர் ஏ.எல்.அலாவுதீன், அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் ஏ.எல்.அமானுல்லா, அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் எம்.எஸ்.அமீன், பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் உயர் அதிகாரிகள், வைத்தியசாலை அபிவிருத்தி சபை உறுப்பினர்கள், உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.

இதன்போது மத்தியமுகாம் வைத்தியசாலைக்கும் உலக வங்கியின் 15 மில்லியன் செலவில் ஆரம்ப வைத்திய பாரமரிப்பு நிலையத்தின் கட்டிடத்திற்கான அடிக்கல் இன்று நாட்டிவைக்கப்பட்டது.






எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -