இலங்கையிலுள்ள சமய நிறுவனங்களுக்கு நிதி வழங்கியதாகத் தெரிவிக்கப்படுகின்ற பொய்யான குற்றச்சாட்டுகளை முஸ்லிம் எய்ட் நிராகரிக்கின்றது.


மய நிறுவனங்களுக்கு நிதி வழங்குவதாகவும் அவற்றுடன் இணைந்து செயற்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்ற குற்றச்சாட்டுகளை முஸ்லிம் எய்ட் சிறிலங்கா திட்டவட்டமாக மறுக்கின்றது.
முஸ்லிம் எய்ட் என்பது ஐக்கிய இராச்சியத்தைத் தளமாகக் கொண்டு 1985ம் ஆண்டு தாபிக்கப்பட்ட ஒரு சர்வதேச நிவாரண மற்றும் அபிவிருத்தி நிறுவனமாகும். இந் நிறுவனம் கம்போடியா, பங்களாதேஷ், பொஸ்னியா, மியன்மார், இந்தோனேசியா, லெபனான், சிறிலங்கா, சூடான் உட்பட 12 நாடுகளில் கள அலுவலகங்களைக் கொண்டு செயற்படுவதுடன், மொத்தமாக 20 இற்கும் மேற்பட்ட நாடுகளில் அரசியல், தேசிய, பால், மத இன வேறுபாடுகள் பார்க்காது அவசிய தேவைப்பாடுகள் உள்ள மக்களின் நலனுக்காகச் செயற்படுகின்றது.
முஸ்லிம் எய்ட் நிறுவனம் மூன்றாம் நிலை சமய நிறுவனங்களுக்கு நிதி வழங்கியதாக சமூக ஊடகங்களிலும் இதர தொடர்பாடல் ஊடகங்களிலும் பொய்யான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவதையிட்டு முஸ்லிம் எய்ட் சிறிலங்கா தனது ஆதங்கத்தைத் தெரிவித்துக் கொள்கின்றது. இவ்வாறான எந்தவித நன்கொடைகளையும் முஸ்லிம் எய்ட் சிறிலங்கா இதுவரை வழங்கியதில்லை. 2004ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு இங்கு செயற்பட்டு வருகின்ற முஸ்லிம் எய்ட் சிறிலங்கா திட்டவட்டமாக மூன்றாம் நிலை சமய நிறுவனங்கள் எவற்றுடனும் எந்தவித தொடர்புகளையும் கொண்டிருக்கவில்லை என்பதை உறுதியாகத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

2004ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி அனர்த்தங்களின் பின் ஸ்தாபிக்கப்பட்ட முஸ்லிம் எய்ட் சிறிலங்கா தேசிய நல்லிணக்கம், உத்தியோக மொழி, சமூக முன்னேற்றம் இந்து விவகார அமைச்சில் தன்னைப் பதிவு செய்து கொண்டுள்ளது. மத, இன, பால், அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் இலங்கையிலுள்ள அனைத்து சமூகங்களையும் இலக்காகக் கொண்டு முஸ்லிம் எய்ட் செயற்பட்டு வருகின்றது. சர்வதேச ரீதியாக ஏற்றுக் கொள்ளப்பட்ட நீடித்த அபிவிருத்தி இலக்குகளின் (Sustainable Development Goals -SDG) அடிப்படையில், குறிப்பாக 'இலக்கு 1' ஆகிய வறுமையை முடிவிற்குக் கொண்டு வருதலை இலக்காகக் கொண்டு, முஸ்லிம் எய்ட் இலங்கையிலுள்ள வறிய குடும்பங்களின் பொருளாதார மேம்பாடு, வாழ்வாதாரத்தை உயர்த்தி வருமானத்தை அதிகரிப்பதற்காக பாடுபட்டு வருகின்றது.
அவ்வாறே, நீடித்த அபிவிருத்தி 'இலக்கு 6' இற்கமைவாக, முஸ்லிம் எய்ட் சிறிலங்கா சுத்தமான குடிநீர் மற்றும் நீர்ச்சுகாதார வசதிகளை வழங்கி வருகின்றது. இலக்கு-6 என்பது மனித நேயச் செயற்பாடுகளில் மூன்றாவது பிரதானமாக அம்சமாக அமைகின்றது. மேலும், அனர்த்தங்களினால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைப்பது என்பது தொடர்பாக விழிப்புணர்வு மற்றும் பயிற்சிச் செயற்பாடுகளிலும், அனர்த்தங்கள் ஏற்படும் போது, உடனடியாக செயற்பட்டு நிவாரணம் வழங்குதல் மற்றும் அனர்த்தப் பாதிப்புகளில் இருந்து மக்களை வழமை நிலைக்குக் கொண்டு வருதல் போன்ற செயற்பாடுகளிலும் முஸ்லிம் எய்ட் சிறிலங்கா கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக இலங்கையில் செயற்பட்டு வருகின்றது.
முஸ்லிம் எய்ட் சிறிலங்கா நிறுவனம் இலங்கையில் செயற்படத் தொடங்கிய காலத்;திலிருந்து துன்பப்படுகின்ற மக்களுக்கு மனித நேயப் பணிகளைச் செய்வது மற்றும் அனர்த்தங்களின் போது உதவிகள் வழங்குவது அதன் அடிப்படைப் பணிகளாக இருந்து வருகின்றன. சுனாமிக்குப் பிந்திய புனர்வாழ்வு புனரமைப்புச் செயற்பாடுகளில் முஸ்லிம் எய்ட் சிறிலங்கா ஈடுபட்துடன், அதற்குப் பின்வந்த வருடங்களில் ஏற்பட்ட இயற்கை மற்றும் யுத்த அனர்த்தங்களின் போது பாதிக்கப்பட்ட மக்களுக்காக உடனடியாக விரைந்து உதவிகளை வழங்கியிருந்தது. மேலும், இலங்கைச் சமூகங்களுக்கிடையில் சமாதான மற்றும் நல்லிணக்கச் செயற்பாடுகளிலும் சர்வ மத அமைப்புகளுடன் இணைந்து முஸ்லிம் எய்ட் யுத்த காலங்களிலும் யுத்த முடிவுற்ற பின்னய வருடங்களிலும் சிறிலங்கா தேசத்தை மீளக் கட்டியெழுப்புப் பணியில் ஈடுபட்டு வந்துள்ளது.
தடைசெய்யப்பட்டுள்ள எந்தவொரு சமய நிறுவனங்களுக்கும் முஸ்லிம் எய்ட் உதவி செய்துள்ளது என்ற குற்றச்சாட்டினை எமது நிறுவனம் திட்டவட்டமாக நிராகரிக்கின்றது. மேலும், முஸ்லிம் எய்ட் சிறிலங்கா சமய நிறுவனம் அல்ல. இதுவொரு மனித நேய அமைப்பாகும் என்பதை அறியத் தருவதுடன், அது எந்தவொரு சமய சிந்தாந்தங்களுக்கோ, சமயக் குழுக்களுக்கோ எந்த வடிவிலும் எந்த வளங்களைக் கொடுத்து ஆதரவு வழங்கியது கிடையாது. அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட உள்ளுர் சமூக சேவை அமைப்புகள், ஐ.நா. வுடன் தொடர்பான அமைப்புகள், இதர சர்வதேச மனித நேய அமைப்புகள், அரசாங்கத் திணைக்களங்கள் (Education and Health Departments of Sri Lanka) போன்றவைகளே, எமது உத்தியோகபூர்வ பங்காளர் அமைப்புகளாகும். இவ் அமைப்புகள் யாவும் இலங்கையிலுள்ள அனைத்து இனங்களையும் சமயங்களையும் சேர்ந்த மக்களுக்குச் சேவை செய்பவையாகும். தவிர, முஸ்லிம் எய்;ட் முன்னெடுத்து வரும் அனைத்து செயற்திட்டங்களும் அந்தந்த மாவட்ட செயலாளரின் ( District Secretary – GA) அனுமதி பெற்ற பின்பே நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
இந்நாட்டில் பல்வேறு பட்ட அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான பல வருட அனுபவங்களைக் கொண்ட, பல்லின சமூகங்களையும் சேர்ந்த பணியாளர்களைக் கொண்ட குழுக்களை எமது நிறுவனம் கொண்டுள்ளது. மேலும், மனித நேயச் செயற்பாடுகள் தொடர்பான நாம் பெற்றுக் கொண்ட அனுபவங்களையும் நிபுணத்துவங்களையும் முஸ்லிம் எய்ட் இந்நாட்டுக்கு பங்களிப்பாக வழங்கி வருகின்றது.
முஸ்லிம் எய்ட் சிறிலங்கா துன்பப்படுகின்ற எல்லா வகையான மக்கள் பிரிவுகளைச் சேர்ந்தவர்களுக்கும் பணியாற்றி வருகின்றது. காரணம். ஓற்றுமை, மனிதம் என்ற பொது அம்சம் மற்றும் பிரிவினைக்குப் பதிலாக நம் அனைவரையும் ஒன்றுபடுத்துகின்ற பல்வேறு அம்சங்கள் நமக்கிடையில் காணப்படுகின்றன என்பதும், இந்த உண்மைகள் கொண்டாட வேண்டும் என்ற கோட்பாட்டை நாம் நம்புகின்றோம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -