
மினுவான்கொடை நகர ஜூம்ஆப் பள்ளிவாசலில் சர்வமத சந்திப்பு ஒன்று நடைபெற்றது. மீண்டும் சகஜீவனை ஏற்படுத்து முகமாக ஊடக சந்திப்பு ஒன்றினை நடாத்தினாா்கள். இவ் ஊடக சந்திப்பினை சிரேஸ்ட ஊடகவியலாளா் எம். ஏ நிலாம், மற்றும் வர்த்தகா் கபீர் ஏற்படுத்தினாா்கள். இங்கு கிரிஸ்த்துவ மத அருட்தந்தை நதிர பெர்ணான்டோ, இந்து மத சிவஸ்ரீ குமாா் சா்மா குருக்கள், மினுவான்கொடை தர்மராம இந்துல உடக்கந்த ஜானந்த தேரா் மற்றும் மினுவான்கொடை ஜம்ஆப் பள்ளிவாசல் பிரதம இமாம் எம்.எஸ்.எம் நஜீம் ஆகியோறும் உரையாற்றினாா்கள். அத்துடன் பள்ளிவாசலில் முன்றலில் சகலரும் இணைந்து வெசாக் தினத்தினை முன்னிட்டு பௌத்த கொடிகளையும் ஏற்றி வைத்தனா்.
இங்கு உரையாற்றிய ஜானந்த தேரா் உரையாற்றுகையில்

பிரதம இமாம் மௌலவி நஜீம் இங்கு உரையாற்றுகையில் - பாதிக்கப்பட்ட மக்களது சொத்துக்கள் மற்றும் கடைகள் மீள வியாபாரங்களை ஆரம்பிப்பதற்கும் அரசாங்கமும் அரச அதிகாரிகளும் முன்வந்து அரச நஸ்ட ஈட்டினை வழங்குமாறு வேண்டிக் கொண்டாா். சேதமுற்ற கட்டிடங்கள் வியாபார நிலையங்களை ஆரம்பிப்பதற்கு உதவுமாறும் வேண்டிக் கொண்டாா்.