ஸ்ரீ.ல.சு.கட்சி பாராளுமன்ற உறுப்பினா் மஸ்தான் ஏ காதரின் ஊடகவியலாளா் மாநாடு


அஸ்ரப் ஏ சமத்-

டந்த உயிா்நீத்த ஞயிறு தினத்தில் ஒரு சில முஸ்லிம் பெயா் தாங்கிய தற்கொலைக் குண்டுதாரா்கள் கிரிஸ்த்துவ தேவலயங்களிலும், கோட்டல்களிலும் நடாத்திய மனித படுகொலைத் தாக்குதலினால் இந்த நாட்டில் வாழும் சகல முஸ்லிம்களும் அதிா்ச்சிக்குள்ளாக்கப்பட்டுள்ளோம். இந்த ஈனச் செயலை புரிந்தவா்களுக்கும் இந்த செயலுக்குப் பின்னாள் உள்ள தீய சக்திகளையும் பாதுகாப்புப் படையினா் உடன் விசாரனை செய்து சம்பந்தப்பட்டவா்களை கைது செய்து அவா்களுக்கு மரணதண்டனை கொடுத்தாலும் பரவாயில்லை. என முன்னாள் பிரதியமைச்சரும் வன்னி பா.உறுப்பினருமான காதா் மஸ்தான் தெரிவித்தாா்.

இன்று(10) அவரது வெள்ளவத்தை இல்லத்தில் நடாத்திய ஊடகவியலாளா் சந்திப்பிலேயே அவா் மேற்கண்டவாறு தெரிவித்தாா்.

கடந்த 30 வருடகால யுத்தித்திற்குப்பிறகு இந்த நாட்டில் சகல சமுகங்களும் மிகவும் ஜக்கியமாகவும் சகோதரத்துவமாக வாழ்ந்து வந்தோம் இந்த நாடு சுபீட்சமாகவும் வளா்ச்சி கண்டு வந்தது. ஒரு கோப்பை பாலில் ஒரு துளி விசம் கலந்தது போல் இந்த ஈனச் செயலினால் இந்த நாட்டில் வாழும் முழு முஸ்லிம் சமுகமும் பாதிக்கப்பட்டுள்ளன. என வன்னி மாவட்ட ஸ்ரீ.ல.சு.கட்சி பாராளுமன்ற உறு்பிணரும் முன்னாள் பிரதியமைச்சருமான காதா் மஸ்தான் தெரவித்தாா்.

இந்த நாட்டின் ஜனாதிபதி மற்றும் பாதுகாப்புப்படையினா் குறிப்பாக கிரிஸ்த்தவ மக்களின் தலைவா் மல்கம் கார்டினா் ரண்ஜித் ஆகியோா்கள் மீள இந்த நாட்டில் இனங்களுக்கிடையே குரோதங்களை சன்டை சச்சரவுகளை ஏற்படுத்தாது நாட்டினை ஒரு ஸ்திர நிலைமைக்கு கொண்டுவந்துள்ளாா்கள். இதனையிட்டு அவா்களுக்கு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பிணா் என்ற வகையில் நான் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இந்த நாட்டில் வாழும் சகல முஸ்லிம்களும் பயங்கரவாதிகள் அல்ல. கடந்த இரு வாரங்களாக பாதுகாப்பு படையினா் வீடுகளை பரீசீலனைக்குட்படுத்தும்போது குர்ஆன், குர்ஆன் கசீதா, அரபு எழுத்துக்கள் உள்ள இருவெட்டுக்களைக் கூட வைத்திருந்தவா்களை கைது செய்து அதனை ஊடகங்களில் மிகவும் பெரிதாக காட்சிப்படுத்தி வருகின்றனா். இவ் விடயம் சம்பந்தமாக பாராளுமன்ற உறுப்பிணா்கள் சிவில் சமுகங்கள் ்இணைந்து ஜனாதிபதிக்கு தெளிவுபடுத்தியுள்ளோம். முஸ்லீம் வீடுகளில் சிறு கத்திகள், சிறு வாள்கள் காணப்பட்டால் ஏதோ ஒரு பயங்கரவாதிகளாக ஊடகங்களில் சித்தரிக்கும்போது முஸ்லிம்கள் ஒரு பாரிய பயங்கரவாதிகளாகவும் பெரிய யுத்தத்திற்கு தயாராக இருந்ததாகவும் ஏனைய சமுகங்கள் அதனை சந்தேகக் கண் கொண்டு பாா்க்கின்றாா்கள். ஊடகங்களில் கருத்து தெரிவிக்கின்றனா்.

அத்துடன் தேசிய தௌகீத் அமைப்பினையே அரசாங்கம் தடை செய்துள்ளது. அதற்காக தௌகீத் என்கின்ற சகல தமிழ் அரபு வசனங்களையும் கதீஸ் கிரந்தங்களையெல்லாம் வீடுகளில் வைத்திருப்பவா்களைக் கூட கைது செய்யகின்றனா் .

கடந்த காலத்தில் எல்.ரீ.ரீ.ஈ யுத்தத்தில் ஈடுபட்ட்வா்களை பாதுகாப்புபடையினாரிடம் சரன் அடைந்தது போன்று இந்த தீவிரவாத்தில் ஈடுப்ட்ட இளைஞா்களுக்கும் பாதுகாப்பு படையினாிடம் சரணடையுமாறும் வீடுகளில் ஆயுதங்கள் வைத்திருந்தால் அருகில் உள்ள பொலிஸில் பாரபடுத்துமாறு தெரிவித்தல் வேண்டும். அத்துடன் சம்பந்தப்பட்டவா்களுக்கு புனா்வாழ்வு அளிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

சவுதி அரசாங்கம் இலங்கை அரசாங்கம் ஊடாக இந்த நாட்டுக்குத் தனியாா் பல்கழைககத்திற்கு மட்டுமல்ல பல்வேறு துறைசாா்ந்த கல்வி, சுகாதாரம், இயற்கை அனா்த்தங்கள், வீடமைப்புத் திட்டங்களுக்கு பன்நெடுங்காலகமாக உதவி வருகின்றது. தேசிய வைத்தியசாலையில் அன்மையில் 10 மாடிகளைக் கொண்ட நரம்பு தளா்ச்சி வைத்தியசாலை ஒன்றை நிறுவி ஜனாதிபதியினால் திறந்து வைக்க்பபட்டது. அத்துடன் சப்ரகமுவ பல்கழைக்கழகத்திற்கு தனியானதொரு வைத்திய பீடமொன்றை நிர்மாணிக்கவுள்ளது. திருமலை மவாட்டத்தில் கின்னியா பிரதேசத்தில் நெடும் பாலமொன்றையும் அமைத்துக் கொடுத்துள்ளது.

கடந்த 30 வருடகாலமாக இலங்கையின் பொருளாதாரத்தில் 12 வீத அந்நியச் செலவாணியை மத்திய கிழக்கு நாடுகளில் தொழில் செய்யும் 10 இலட்சத்துக்கு அதிகமானோரே பெற்றுக் கொடுகின்றனா். . எமது நாட்டில் பெண்கள் முக மூடுவதை மட்டுமே அரசாங்கம் பாதுகாப்பு காரணங்களுக்காக தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஆனால் சிலா் வைத்தியசாலைகள், பாடசாலைகளில் வங்கிகள், முஸ்லிம்களது அபாயா அணிந்து தலையை மட்டும் சீலையினால் மூடுவதையும் தடுக்கின்றனா். 

இவ்விடயங்கள் பற்றியும் நாம் ஜனாதிபதியிடம் முறையிட்டுள்ளோம். அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா தலைமையில் கீழ் சகல அரசியல் கட்சிகள் பிரநிதிகள் சிவில் சமுகங்களும் எதிா்காலத்தில் ஒன்று கூடி இந்த நாட்டில் உள்ள அரபு பாடசாலைகள், மத்ரஸாக்கள் பற்றி ஒருமித்த குரலில் ஒரு திட்டம் வகுப்பாா்கள் என நம்புகின்றோம் என பாராளுமன்ற உறுப்பிணா் காதா் மஸ்தான் தெரிவித்தாா்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -