ஹட்டன் கே.சுந்தரலிங்கம்-
இந்த ஊடக சந்திப்பின் முக்கிய நோக்கம் இன்று நாட்டு மக்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தலாக இருக்கின்றது. ஒருவர் இன்று வெளியில் சென்று வீடு திரும்பும் வரை அவரது உயிருக்கு உத்திரவாதம் இல்லாத நாடாக மாறியிருக்கிறது.எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம. என்று மாறியிருக்கின்றது.விசேடமாக நான் இங்கே ஒரு விடயத்தினை கூற நினைக்கின்றேன் 2016 ஆண்டு வடக்கு பிரதிநிதிகள் இரானுவத்தினை வடக்கில் இருந்து வெளியேற வேண்டும் என்றும் குரல் கொடுத்தார்கள்.
அத்தருணத்தில் ரானுவம் வடக்கில் இருந்து வெளியேற கூடாது என்றும் வடக்கு இரானுவ பாதுகாப்பு தேவை என்று கூறியது, எமது அமைப்பு அருணலு மக்கள் முன்னணி அப்போது இருந்த இரனுவ தளபதி தர்சன ஹெட்டி ஆராச்சி மக்களுக்கு பல நலன்புரி திட்டங்களை முன்னெடுத்து வந்திருந்தார்.
50 ஆயிரம் தென்னை மரங்கள் 75 ஆயிரம் பனை மரங்கள் நாட்டுவது பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்குவது, மருத்துவ முகாம்கள் உட்பட பல சேவைகளையும் தீவிரவாதிகளுக்கு எதிராகவும ;ஹாவா குழுக்களுக்கு எதிராகவும் பல சேவைகள் முன்னெடுத்திருந்தார்கள்.
இதனால் மக்கள் வாழ்வதற்கு நல்ல கட்டுப்பாட்டு ஷசூழலினை ஏற்படுத்தியிருந்தார்கள். இவ்வாறான தருணத்தில் தான் தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்தை சேர்ந்த அமைச்சர்களும் வெளி வேண்டும். என கோரரிக்கை வைத்திருந்தார்கள்.அதனை எதிர்த்து பத்திரைகை வாயிலாக சுட்டிக்காட்டியிருந்தோம்.
அன்று ரானுவத்தை எதிர்த்தவர்கள் இன்று இரானுவம் தேவை என கூறி வருகிறார்கள்.அன்று அவர்கள் கூறியது போல் இரானுவத்தனை எடுத்திருந்தால் இன்று மூன்று வாரங்களுக்கு நாட்டில் ஏற்பட்ட அசாம்பாவிதங்களை போல் வடக்கிலும் கிழக்கிலும் ஏற்பட்டிருருக்கலாம் அதனை ஆலோசித்து செய்தமைக்காக ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் நன்றி தெரிவிக்கிறேன். என அருணலு மக்கள் மன்னணியின் தலைவரும் ஐக்கிய தேசிய சுதந்தர முன்னணயின் தேசிய அமைப்பாளருமான டொக்டர் கிசான் தெரிவித்தார்.
இன்று ( 18) ஹட்டனில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் அரசியல் பிரதிநிதிகள் கருத்துக்களை முனவைக்கும் போது சிந்தித்து செயப்பட வேண்டும் மக்களுக்கு பாதுகாப்பு இருக்கின்றதா? யோசித்து செயப்பட வேண்டும். இன்று தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. வுடக்கு மக்களுக்கு வேலை வாய்ப்புக்கள் இல்லை. பொருளாதார பிரச்சினைகள் மிகவும் மோசமாக உள்ளது.பாதுகாப்பு பிரச்சினையும் மோசமான நிலைமைக்கு இந்த நாடு பூராகவும் தள்ளப்பட்டுள்ளது.
இவற்றிக்கெல்லாம் எதிராக ஜனாதிபதி அவர்கள் பாராளுமன்றத்தில் விசேட அமைப்பை கொண்டு வந்திருக்கிறார்.இந்த அமைப்புக்கு 20 கட்சித் தலைவர்களை அழைத்து தேசிய பாதுகாப்பு மேற்பார்வை குழு என்று பெயர் ஷசூட்டப்பட்டு இதில் புதிய பயங்கர வாதத்திற்கு எதிராக செயப்பட வேண்டியதற்கு தேவையான சட்டங்களை கொண்டு வருவதற்கு தேவையான ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளது. இதனை நாங்கள் வரவேட்கின்றோம்.
இதில் கல்விக்கு ஒரு அமைச்சு சமையத்திற்கு ஒரு அமைச்சு என்றெல்லாம் இல்லாமல் சகல மாணவர்களும் ஒரே பாடசாலையில் படிக்கும் வகையில் சகல இனங்களுக்கும் சகல மதங்களும் ஒன்றாக பயணிக்கும் வகையில் கடந்த காலங்களில் செயப்பட்டது போல் செயப்படுவதற்கு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தில் நாம் கேட்டுக்கொண்டது யாரேனும் எந்த சமயத்தவரும் ஜனாதிபதியாக வர வேண்டும் என்றாலோ அல்லது முதலமைச்சராக வர வேண்டும் என்றாலோ வெற்றி பெற்றால் வர முடியும். என்ற நிலையினை உருவாக வேண்டும். என்று அனைவரும் இலங்கையர் என்ற ரீpதியில் முன்னெடுக்கப்பட வேண்டும்.என்று வலியுறுத்தப்பட்டது. இது தொடர்பாக சகல கட்சிகளும் அறிக்கை ஒன்றினை தயாரிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
விசேடமாக நுவரெலியா பெமம்பான்மையாக தமிழ் மக்கள் காணப்பட்ட போதிலும் மாவட்டத்தில் மாவட்டச்செயலாளர்கள்,பிரதேச செயலாளர்கள்,நியமி;பதில்லை இதனை நாம் சரியாக நடைமுறைபடுத்துவோமானால் தமிழர் வரக்கூடிய சந்தர்ப்பம் ஏற்படும் .பிரதேசத்தின் இவ்வாறான நியமங்களை செய்யும் போது இன ரீதியாக பார்க்காமல் கல்வி ரீதியாக பார்த்து பதவிகளை வழங்கும் நிலை உருவாக வேண்டும்.இவ்வாறு செய்வதன் மூலம் இனவாதம் தீவரவாதம் போன்றன உருவாகாமல் இருக்க வாய்ப்பளிக்கும் என்பதனை நான் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்.
இலங்கை போன்ற நாடுகளுக்கு இது போன்ற திட்டங்கள் தான் தேவையாக உள்ளது ஏன் தீவிரவாதம் வருகிறது ஏன் இனவாதம் வருகிறது என்றுகேள்விகளை கேட்டால் அதற்கு ஏதோ ஒரு குறைபாடு இருக்கின்றது.
ஒரு சமூத்தை அடக்கி ஒடுக்கும் போது ஒரு சமயத்தை நசுக்கும் போதும் அவர்கள் வேறு ஒரு பாதை நோக்கி செல்வதனை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.இதனை ஜனாதிபதி அவர்களும் கண்டியில் கூறியிருந்தார்.எல்லா தமிழ் மக்களும் தீவிரவாதிகள் இல்லை எல்லா முஸ்லிம் மக்களும் தீவிரவாதிகள் இல்லை. எல்லா சிங்கள் மக்களும் இனவாதிகளும் இல்லை. ஒரு சாரர் அரசியல் லாபம் கருதி மக்களை தூண்டிவிட்டு இதனை செய்கிறார்கள்.
இவர்கள் நாட்டிலும் மக்களுக்கிடையிலும் பிரச்சினைகளை ஏற்படுத்தியிருக்கிறாரர்கள்.ஆகவே இவ்வாறான திட்டங்கள் கொண்டு வரும் போது இன மத மொழி வேறுபாடுகள் களைந்து அனைவரும் இணைந்து செயப்படுவதன் மூலம் இந்த நாட்டில் சுபீட்சைத்தை ஏற்படுத்தலாம். அவ்வாறு இல்லாத இவர் தமிழர் இவர் முஸ்லிம் என்று எண்ணி திட்டங்களை கொண்டுவருவோமேயானால் இது வெற்றியளிக்காது போய்விடும் என அவர் மேலும் தெரிவித்தார்.