ஆசியா மற்றும் பசுபிக் நாடுகளின் விவசாய கூட்டுறவு அபிவிருத்தி வலையமைப்பின் நிறைவேற்றுக்குழுக்கூட்டம் நாளை (07) தாய்லாந், பங்கொக்கில் நடைபெறவுள்ளது. இந்தமாநாட்டில் ஆசியா மற்றும் பசுபிக் நாடுகளின் விவசாய கூட்டுறவு அபிவிருத்தி வலையமைப்பின் உப தலைவரும், கூட்டுறவு இளைஞர் வலுவூட்டல் அமைப்பின் தலைவருமான எம்.எஸ். முஹம்மது றியாஸ் மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் நசீர் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
அமைப்பின் தலைவர் சந்திப்குமார் நாயக் தலைமையில் இடம்பெறும் இந்த நிறைவேற்றுக்குழுக் கூட்டத்தில் பங்களதேஷ், சீனா, ஈரான், பிலிப்பைன்ஸ், தாய்லாந்து ஆகிய நாடுகளின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர்களும் பங்கேற்கின்றனர்.
ஆசிய மற்றும் பிராந்திய நாடுகளின் கூட்டுறவின் அடிப்படையிலான விவசாயத்துறையை மேம்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள அமைப்பு இந்த துறையில் நவீனத்துவங்களை புகுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.
முதன் முதலாவதாக இந்தியாவின் தலைநகர் டெல்லியில் ஒக்டோபர் மாதம் 11, 12 மற்றும் 13ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ள இந்திய சர்வதேச கூட்டுறவு வர்த்தக கண்காட்சி தொடர்பான ஏற்பாடுகள் இந்த நிறைவேற்றுக்குழுக் கூட்டத்தில் ஆராய்யப்படும் என அமைப்பின் உப தலைவர் ரியாஸ் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -