கல்முனை மாநகர சபையின் உறுப்பினர் எம்.ஐ. அப்துல் மனாப் தற்காலிக தீர்வு பெற்றுக் கொடுத்தார்
எஸ்.அஷ்ரப்கான்-கல்முனை இஸ்லாமாபாத் வீட்டுத் திட்டத்தில் உள்ள மலசலகூடத்தின் குழி பழுதடைந்த நிலையில் உள்ளதாகவும் அதனால் துர்நாற்றம் வீசி சூழல் மாசுபடுவதாகவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்முனை மாநகர சபையின் உறுப்பினர் எம்.ஐ. அப்துல் மனாபிடம் பிரதேச மக்கள் தெரியப்படுத்தியதை அடுத்து மாநகர சபையின் உறுப்பினர் எம்.ஐ. அப்துல் மனாப் முதல்வர் றக்கீபிடம் விடயத்தை கூறி பெகோ இயந்திரத்தின் மூலம் குழி ஒன்றினை ஏற்படுத்தி இப்பிரச்சினைக்கு தற்காலிக தீர்வினை இன்று (06) பெற்றுக் கொடுத்தார்.
இந்நிலையில் சம்பவ இடத்திற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மற்றுமொரு கல்முனை மாநகர சபை உறுப்பினர் பாத்திமா சமீனாவும் பிரசன்னமாகியிருந்தார்.
கல்முனை மாநகர சபையின் உறுப்பினர் எம்.ஐ. அப்துல் மனாப் மிக நீண்ட காலமாக இஸ்லாமாபாத் மக்களின் பல்வேறு பிரச்சினைகளுக்கும் முன்னின்று தீர்வுகளை பெற்றுக் கொடுத்து வருகின்றமையினால் இஸ்லாமாபாத் பிரதேச மக்கள் கல்முனை மாநகர சபை உறுப்பினர் எம்.ஐ. அப்துல் மனாபிற்கு நன்றிகளை தெரிவித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.