"90ஆம் ஆண்டு முதல் இப்போது வரை கிட்டத்தட்ட 30கிராமங்கள் முசலியில் உள்ளன. இதில் தலையாய கிராமம் தான் சிலாவத்துறை டவுன் ஆகும்.இதில் இப்பிரதேசத்தை சேர்ந்தவர்கள் மட்டுமல்ல பண்டாரவெளி போன்ற முசலி பிரதேசத்துக்கு உரித்தான ஏனைய மக்களின் கடைகள்,வீடுகளும் உள்ளன.ஜும்மாபள்ளியும் இங்கு தான் இருந்தது.வி.சி கட்டடம் மற்றும் பல அரச கட்டிடங்களும் இங்கு தான் இருந்தது.தற்போது நேவி படையினர் இருக்கும்முகாமுக்கு கிழக்காக உயர்தரம் வரை உள்ள சிலாவத்துறை அரசினர் கலவன் பாடசாலையும் மேற்கில் ,இந்த 30 கிராம மக்களும் வைத்தியத்திற்காக நாடும், ஆதார வைத்தியசாலையும் அமைந்துள்ளது.
தற்போது கடற்படையினர் முகாம் உள்ள பகுதி 36 ஏக்கர் பரப்பளவை கொண்டது.
கேள்வி?
34 ஏக்கர் மட்டுமே என கடற்படையினர் கூறுவது உண்மை இல்லையா?
பதில்;இல்லை.36ஏக்கரில், 2 ஏக்கர் மாத்திரமே அரச காணி.ஏனைய 34 ஏக்கரும் தனியாருக்கு சொந்தமானவை.அதில் காணிஉறுதி ஒப்பம் மற்றும் பேமிட் என ஒவ்வொரு வகையில் தமது உரித்தை நிலைநாட்டக்கூடியவர்களின் ஆவணங்கள் ஆதாரமாக உள்ளது.
கேள்வி?
உங்களது கட்சி இது சம்ந்தமாக கடந்த காலங்களில் ஏதும் நடவடிக்கைகளை எடுத்தார்களா?
பதில்;ஆம்.கடந்த வருடம் s.l.m.c யால் ஆவணங்களை தொகுத்து பிரதமருக்கும் பாதுகாப்பு அமைச்சுக்கும் கையளித்தோம்.அதன் பிறகே 6 ஏக்கர் இவ்வருடம் விடுவிக்கப்பட்டு, மக்களுக்கு வழங்கப்பட்டது.மீதமுள்ள 28 ஏக்கர் தனியார் காணியும் 2ஏக்கர் அரச காணியும் உள்ளது.இதை பலவகையில் அரசியல் ரீதியாக பிரதமரிடம் கூட , கடந்த பிரதேச சபை தேர்தல் பிரச்சார நேரத்தில் முன் வைத்த போது, இங்கு அந்த வேளையில் பிரதமர் கூட இந்த கேம்புக்கு முன்னால் மேடையில், மக்களின் முன்னால் இந்தக்காணியை விட்டும் கடற்படையினரை அகற்றி தருவதாக வாக்களித்தார்.
கேள்வி? 51 நாள் பிரதமர் யார் என்ற நிலையில் இரு கட்சிகளுடனும் பேச்சு வார்த்தை செய்தபோதும் இதை கோரியதாக அறியக்கிடைத்தது.இதுபற்றி?
பதில்; ஆம் அப்போது கூட சஜித் பிரேமதாச மற்றும் பிரதமரிடம் எமது கட்சி சார்பாக நான் கதைத்தபோது முகாமை அகற்றவதாக ஒத்தக்கொண்டார்கள்.சிறுபான்மை கட்சிகளை மகிந்த தரப்பும் பேச்சு வார்த்தைக்கு கூப்பிட்டு இருந்தார்கள்.
அந்த நேரத்தில் பிரதமரிடம் முக்கியமாக முள்ளிக்குளம் மற்றும் சிலாவத்துறை தமிழ் முஸ்லிம் மக்களின் காணிகளை கடற்படையினரிடமிருந்து விடுவிக்குமாறே நான் கதைத்தேன்.அடிப்படை வசதியின்மை ,பாதை பிரச்சனை,வீட்டுத்திட்டம் என பல கோரிக்கைகளில் இதையே நான் பிரதானமாக கேட்டேன்.பிரதமர் அளித்த வாக்குறுதியில் மட்டுமல்லாது அரசியல் அதிகாரங்களில் உள்ளவர்களிலும் மக்கள் தற்போது நம்பிக்கை இழந்தள்ளனர்.நானும் அண்மைய சாத்வீக போராட்டத்தில் கலந்து கொண்டேன்.
கேள்வி?
கடைசியாக என்ன நடவடிக்கைகளை எடுத்தீர்கள்?
பதில்;கடற்படையினர்க்கு மகஜர் ஒன்றை கையளித்துள்ளோம்.அவ்வாறே பிரதேச செயளாலர்க்கு கொடுத்த போது அவர் அவர் மாவட்ட அரச அதிபர் ஊடாக ஆளுனர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வருவதன் மூலம் நல்ல முடிவை பெற்றுத்தருவதாக வாக்குறுதி தந்தார்.
அதே போல கடற்படை மக்கள் தொடர்பு அதிகாரியும்கடிதத்தை பொறுப்பெடுத்தார்.தொலைபேசி ஊடாக கடற்படை முகாம் பொறுப்பதிகாரியும் பேசி, இது சம்பந்தமாக, மக்களுக்கு நல்ல முடிவு கிடைப்பது மாதிரியான அறிக்கையை அரசிடம் கொடுப்பதாக கூறினார்.
கேள்வி?
ஏற்கனவே 66 பேர் மட்டுமே குடியிருந்ததாக பிரதேச செயலாளர் கூறியதாகவும் பல பேச்சு வார்த்தைகளில் மக்கள் ஒத்துக்கொண்டதாகவும், தற்போது கூடுதலான மக்கள் காணிக்கு உரிமை கோருவதாகவும் கடற்படையின் ஊடக பேச்சாளர் இசுரு சூரிய பண்டார அவர்கள் குற்றம் சாட்டுகின்றார்.இதன் விளக்கம் என்ன?
பதில்;மக்கள் சார்பாக நான் இதை முற்றாக மறுக்கிறேன்.2010-2015வரை நான் முசலி பிரதேச தவிசாளர்.அப்போது பொலிஸூக்கு கடற்படையினருக்கு என கிராமத்தில் அல்லாதுஇக்கிராமத்திலிருந்து 1அல்லது 1 1/2 கி.மீ.தூரத்தில்பொறுத்தமான இடத்தை ஒதுக்கி கொடுத்துள்ளோம்.இப்போது அந்த இடத்த்தில் சிறிய நேவி கேம்ப்பும் அமைத்துள்ளார்கள்.மக்களுக்கு பாது காப்போ அல்லது கடத்தலை தடுப்பதோ என்ன பிரச்சனை என்றாலும் கடமையை அங்கு செய்ய தடையில்லை.
சீசனுக்கு வரும் , வெளிமாவட்ட பெரும்பான்மை இன மீனவர்கள் கூட சரியாக தொழிலில் ஈடுபட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கேள்வி?
கடற்படை பேச்சாளர் கூறுகிறார் இந்த முகாம் காணியை விடுவித்தால், பாதுகாப்புமற்றும் சட்டவிரோத தொழில்களை தடுக்க முடியாத நிலை ஐற்படும் என..
பதில்;முள்ளிக்குளம் தொடக்கம் அரிப்பு வரைகடற்கரை இருக்கின்றது.முள்ளிக்
குளத்துக்கும் கொண்டச்சி குடாவுக்குமிடையில் எந்த துறை முகமுமில்லை.1000ஏக்கரில் கடற்படை முகாம் உள்ளது.அதிலிருந்து அரிப்பு வரை கடமையை செய்யலாம்.அவர்களின் படகு மூலம் கடலிலிருந்தே கடமையை செய்யலாம்.இந்த முகாமில் இருந்து தான் தடுக்க வேண்டும் என்றுமில்லை.அதனையண்டிய
குதிரைமலையிலும் சோதனை சாவடி உள்ளது.
கேள்வி?
மக்கள் கோரிக்கை பற்றி?
எமது மக்கள் நேவி வேண்டாம் என சொல்லவில்லை.மக்களுடைய காணியை விட்டு அரச காணிகளுக்குஇடம் பெயருமாறே கூறுகின்றனர்.இதை விட பொறுத்தமான இடமான அ.கோட்டையில் நேவி பொயின்ட் அமைத்துள்ளார்கள்.
கேரள கஞ்ஜா கூடுதலாக பிடிபடும் இடமும் அது தான்.படையினரே ஆதரவு கொடுத்து வெளியே விடுவிக்கிறார்கள்.இது சம்பந்தமாக சுங்க அதிகாரிகளுக்கும் முறையிட்டுள்ளோம்.
இது இவர்கள் அடாத்தாக பிடித்துள்ளார்கள்.ஒருபக்கம் பாடசாலை மறுபக்கம் வைத்தியசாலை.முசலியின் "heart of the city".
கேள்வி?
66 பேரில் இறந்தவர்களுக்கு காணி உரித்து மறுக்கப்பட்டுள்ளது பற்றி என்ன கூறுகிறீர்கள்?
பதில்;இறந்தவர்கள் அனைவரும் மலடானவர்கள் அல்ல. உதாரணமாக நான் 90களில் ஒரு குடும்பம்.இப்போது 7 குடும்பமாக எனது குடும்பம் 25அங்கத்தவர்களாக பெருகி உள்ளது. இவ்வாறே இந்த கேம்ப் காணிக்குள் வாழ்ந்த குடும்பங்கள் வாரிசுகள் அவர்களது பிள்ளைகள் என குடம்பங்கள் பல்கிப்பெருகி உள்ளன.காணிகள் இது மட்டுமல்ல இன்னமும் கொடுக்க வேண்டும்.
கேள்வி?
யுத்த காலத்தில் மக்கள் வெளியேற்றப்பட்டு படையினர் கையகப்படுத்தப்பட்ட காணிகளுக்கு சட்டரீதியான ஏற்பாடுகள் என்ன?
பதில்;83 ம் ஆண்டுக்கு பிறகு அரசினரோ அல்லது யாரேனும் ஒருவரோ வடகிழக்கில் உள்ள காணிகளுக்கு உறுதி மாற்றம் செய்யப்பட்டிருந்தால்,அது செல்லுபடியாகாது.இதன்படி இவர்கள் எதை செய்திருந்தாலும் செல்லுபடியாகாது.
ஒரு காணியை அரசுஉள்வாங்கி கையகப்படுத்த அதற்கான படிமுறைகளை பின்பற்ற வேண்டும்.அக்காணிகளுக்கான எஸ்டிமேட் கொடுக்க வேண்டும்.உரியவர்களின் அனுமதி பெறப்படல் வேண்டும்.அவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.இதை இவர்கள் செய்யவே இல்லை.
கேள்வி?
சட்டப்படி எப்போதாவது வர்த்தமானி அறிவித்தவில் படையினருக்கு முகாமுக்கு இடம் ஒதுக்கப்பட்டதா?
பதில்;1972 ம் ஆண்டு வர்த்தமானியில் ராணுவத்துக்கு மட்டும் முகாம் அமைக்க அனுமதி வழங்கப்பட்டு அறிவித்தல் வெளியிடப்பட்டது.அதற்கு எந்த ஆட்சேபனையும் இல்லை.
இப்போது பொலிஸூம் நேவியும் முழுக்கிராமத்தையும் ஆக்கிரமித்து இருக்கிறார்கள்.
அவர்கள் யாருக்கு..மக்களுக்கு பாதுகாப்புக்கு?
மக்கள் இல்லாத பிரதேசத்தில் இவந்கள் எதற்கு?
மக்களுக்கே இருக்க இடமில்லாவிட்டால் இவர்கள் எதற்கு* இது தான் மக்களின் கேள்வி.எமக்கு படையினர், பொலிஸ் தேவை தான்! ஆனால் இந்த இடத்தில் அல்ல. இடம்பெயர வேண்டும்.முள்ளிக்குளம் முகாமையே பயன்படுத்ட்டும்.
கரையில்பொலிசாரே கடமை ஙெய்ய வேண்டும்.கடலில் மட்டுமே கடற்படையின் கடமை.தரையில் இவ்வளவு டம் ணௌவையற்றது. அவர்களது நோக்கம் இடம்பெயர்வது அல்ல. இதற்கு காரணம் இந்த முகாமுக்குள் இவர்களால் ஸ்தாபிக்கப்பட்ட சில விடயங்க!.
பொருத்தமான இடம் இருந்தும் இவர்கள் இடம் பெயர இல்லை என்றால் அதன் அர்த்தம் வேறு!
