பாகிஸ்தான் மீது குண்டு மழை பொழிய, புதிய அதிநவீன போர் விமானத்தை, இந்திய விமானப் படை ரகசியமாக களத்தில் இறக்கி விட்டுள்ளது. இதனால் உச்சகட்ட பதற்றம் நிலவுகிறது.
பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் ஜெய்ஷ் இ முகமது (Jaish-e-Mohammed) என்ற இயக்கத்தை சேர்ந்த ஒருவர், காஷ்மீர் மாநிலம் புல்வாமா பகுதியில், கடந்த சில நாட்களுக்கு முன், திடீரென தாக்குதல் நடத்தினார்.
சுமார் 350 கிலோ வெடி பொருட்கள் நிரப்பப்பட்ட காரை ஓட்டி வந்த குறித்த நபர், மத்திய ரிசர்வ் பொலிஸ் படை எனப்படும் சிஆர்பிஎப் (Central Reserve Police Force) வீரர்கள் பயணித்த பேருந்து மீது திடீரென மோதியதனால் அப்பேருந்து சுக்கு நூறாக வெடித்து சிதறியது.
இதில், 44 சிஆர்பிஎப் வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இந்த தாக்குதலில், தீவிரவாதத்தை ஊக்குவித்து வரும் பாகிஸ்தான் அரசுக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் பாகிஸ்தானுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கை இந்தியா முழுக்க வலுவடைந்து வருகிறது.
எனவே தவறு செய்தவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார். அத்துடன் இந்திய இராணுவத்துக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனவே இந்தியா-பாகிஸ்தான் இடையே உச்சகட்ட போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தான் மீது உடனடியாக போர் தொடுத்து, தீவிரவாதத்தை வேரறுக்க வேண்டும் என்பதே இந்திய மக்கள் பெரும்பாலானோரின் கோரிக்கையாகவும் உள்ளது.
இந்த சூழலில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், அந்நாட்டு இராணுவத்துக்கு திடீர் உத்தரவு ஒன்றை தற்போது பிறப்பித்துள்ளார். இதில், ''பாகிஸ்தான் மீது இந்தியா போர் தொடுத்தால், தக்க பதிலடி கொடுங்கள்'' என கூறப்பட்டுள்ளது.
இந்திய ராணுவம் எப்போது வேண்டுமானாலும் அதிரடி தாக்குதல் நடத்தும் என்பதால், பாகிஸ்தானில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், அந்நாட்டு இராணுவ வீரர்களுக்காக தயார் செய்யப்பட்டு வருகின்றன. இவ்வாறு இரு நாடுகள் இடையே தற்போது உச்சகட்ட பதற்றம் நிலவி கொண்டுள்ள சூழலில், எல்சிஏ தேஜாஸ் (LCA Tejas) என்ற அதிநவீன போர் விமானம் (Fighter Jet), இந்திய விமான படையில், பெப்ரவரி 21 அதிகாரபூர்வமாக சேர்க்கப்பட்டது.
எதிரிகளை எதிர்த்து போரிட, எல்சிஏ தேஜாஸ் போர் விமானம் முழுமையாக தயார் நிலையில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது இந்தியா சுயமாக உருவாக்கிய முதல் போர் விமானம். (India's 1st Self-Made Fighter Jet) இதில், எல்சிஏ என்பது இலகு ரக போர் விமானம் (LCA-Light Combat Aircraft) என்பதை குறிக்கிறது. எல்சிஏ தேஜாஸ் எப்போது வேண்டுமானாலும் இந்திய விமானப்படையில் சேர்க்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு கடந்த சில நாட்களாகவே நிலவி வந்தது.
இந்த சூழலில் தற்போது, இராணுவ விமான ஒழுங்குபடுத்தும் அமைப்பான ''செமிலாக்'' (CEMILAC-Centre for Military Airworthiness and Certification), எல்சிஏ தேஜாஸ் போர் விமானத்துக்கான இறுதி செயல்பாட்டு அனுமதி சான்றிதழை (FOC-Final Operational Clearance) வழங்கியுள்ளது. செமிலாக் என்பது டிஆர்டிஓ அமைப்பின் கீழ் (DRDO-Defence Research and Development Organisation) செயல்பட்டு வரும் ஆய்வுகூடம் ஆகும். இராணுவ விமானங்களின் பறக்கும் தகுதி உள்ளிட்டவற்றை பரிசோதித்து, அதற்கு சான்றிதழ் வழங்குவது இதன் முக்கியமான பணி. இந்த சூழலில்தான் எல்சிஏ தேஜாஸ் போர் விமானத்துக்கு செமிலாக் அமைப்பு பச்சை கொடி காட்டியுள்ளது. இது இந்தியாவின் வரலாற்றில் ஒரு மைல்கல்லாக பார்க்கப்படுகிறது. எல்சிஏ தேஜாஸ் வருகையின் மூலம் இந்திய விமானப் படையின் பலம் பன்மடங்கு அதிகரித்துள்ளது.
ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (Hindustan Aeronautics Limited-HAL), டிஆர்டிஓ மற்றும் வானூர்தி மேம்பாட்டு நிறுவனம் எனப்படும் ஏடிஏ (ADA-Aeronautical Development Agency) ஆகிய மூன்று அரசு நிறுவனங்கள் மூலம் எல்சிஏ தேஜாஸ் திட்ட பணி வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. எல்சிஏ தேஜாஸ் இலகு ரக, மல்டி ரோல், ஒற்றை என்ஜின் கொண்ட தந்திரோபாய போர் விமானம் ஆகும். இதில், விமானிகளுக்கு தேவையான தகவல்களை வழங்க, ஹெட் அப் டிஸ்ப்ளே (HUD-Head Up Display) மற்றும் 2 மல்டி பங்ஷன் டிஸ்ப்ளேக்கள் (MFD-Multifunction Display) உள்ளன.
எல்சிஏ தேஜாஸ் போர் விமானத்தில், எப்404-ஜிஇ-ஐஎன்20 டர்போஃபேன் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் எடை மட்டுமே 1,035 கிலோ என்பது குறிப்பிடத்தக்கது. எரிபொருள் தீர்ந்து விட்டால் தரையிறங்க வேண்டிய அவசியமும் இதற்கு கிடையாது. நடுவானிலேயே எரிபொருள் நிரப்பி கொள்ளும் திறன் பெற்றதாகவும் எல்சிஏ தேஜாஸ் போர் விமானம் உருவாக்கப்பட்டுள்ளது. எல்சிஏ தேஜாஸ் போர் விமானத்தின் வருகை, பலருக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.ஐபிசி